அஸ்வினி முதல் ரேவதி வரை: சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் 2026

அஸ்வினி முதல் ரேவதி வரை: சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் 2026
Updated on
4 min read

அஸ்வினி: இந்த ஆண்டு காரியத்தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும். மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும்.

பரணி: இந்த ஆண்டு புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும் என்றாலும் ஏழாம் இடத்தில் இருக்கும் ராகுவால் சிற்சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த ஆண்டு உறவினர் வகையில் அதிக நெருக்கம் வேண்டாம். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். ஆனாலும் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. உடன் பணிபுரிவோரிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். சிலர் எதிர்பாராத இடமாற்றத்தை சந்திக்கலாம்.

ரோகிணி: இந்த ஆண்டு சொந்தத் தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். ஆனாலும் உழைப்புக்கு ஏற்ற லாபம் கிடைக்கும். தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த ஆண்டு எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது. புதிய முதலீடுகளின் போது ஆலோசனைகள் அவசியமாகிறது. பண விஷயத்தில் தொடர்ந்து அக்கறை தேவை.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு நீண்ட முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்கு வாதம் ஏற்படலாம்.

திருவாதிரை: இந்த ஆண்டு பிற்பாதி மிகவும் சிறப்பாக இருக்கிறது. வேலையில் தீவிர அக்கறை எடுக்க வேண்டும். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து போக வேண்டியிருக்கும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த ஆண்டு உடல் நலத்தைப் பொறுத்தவரையில் பித்தம் மயக்கம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். மனதில் பட்டதை பளிச்சென்று சொல்வீர்கள்.

அஸ்வினி முதல் ரேவதி வரை: சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் 2026
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசியினருக்கு எப்படி?

புனர் பூசம் 4ம் பாதம்: இந்த ஆண்டு இதுவரை இருந்து வந்த பலவிதமான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பின் தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை.

பூசம்: இந்த ஆண்டு உங்களுடைய உடல் நலத்தை பொறுத்த வரை கால் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப் புழக்கம் இருக்கும்.

ஆயில்யம்: இந்த ஆண்டு எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீன் விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் தம்பதிகளில் இடையே இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும்.

மகம்: இந்த ஆண்டு பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். முயற்சிகளின் பேரில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும்.

பூரம்: இந்த ஆண்டு புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒரு முறைக்கு இரு முறை விசாரித்து வாங்குவது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் அன்னியோன்னியமாக இருப்பர்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த ஆண்டு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும். எதிர்பார்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு மேலதிகாரிகளின் அனுசரனை இருந்து வரும். வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றைப் பெறலாம். லாபம் அதிகரிக்கும். உங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். எதிரிகளை வீழ்த்துவதற்கு உண்டான பாதைகளை வகுத்துக் கொள்வீர்கள்.

அஸ்தம்: இந்த ஆண்டு புதியதாக ஆரம்பித்த தொழிலில் ஏற்றம் உண்டு. இரும்பு தொடர்பான தொழிலில் அதிக வருவாய் வந்து சேரும். கூட்டளிகள் இடையே ஒற்றுமை பலம் ஏற்படும்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த ஆண்டு புதிய ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. உடன் இருப்போரால் பிரச்சனைகள் வரலாம்.

அஸ்வினி முதல் ரேவதி வரை: சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் 2026
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026: கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு எப்படி?

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு சீரான பலனை எதிர்பார்க்கலாம். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் வந்தே தீரும். வழக்கு விவகாரங்கள் மேலும் தள்ளிப் போகும். எல்லாம் நல்லதே நடக்கும்.

சுவாதி: இந்த ஆண்டு வீண் கலகமும் அலைச்சலும் இருக்கும், இருப்பினும் குருவின் பார்வை தைரிய வீரிய ஸ்தான ராசியில் விழுவதால் காரிய அனுகூலமும் நற்சுகமும் பொருளாதார மேம்பாடும் உண்டாகும். நன்மைகள் கிடைக்கும்.

விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த ஆண்டு மதிப்பு மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சிகளில் சிறு சிறு தடைகள் வரலாம். உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தார் புரிந்து கொண்டு அனுசரனையாக நடந்து கொள்வர்.

விசாகம் 4ம் பாதம்: இந்த ஆண்டு தடைகளை முறியடித்து காரிய வெற்றி காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றவர்கள் என்று சேருவார்கள்.

அனுஷம்: இந்த ஆண்டு கணவன்-மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரனாகவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும்.

கேட்டை: இந்த ஆண்டு உறவினர்கள், நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். உடல் நலனைப் பொறுத்த வரை சிறப்பாக இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கோரிக்கைகள், ஒப்பந்தங்கள் நிறைவேறும்.

மூலம்: இந்த ஆண்டு உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

பூராடம்: இந்த ஆண்டு வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும். தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தை விட வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். லாபம் கூடும்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த ஆண்டு புதிய தொழிலால் அனுகூலம் ஏற்படும். எதிரிகளால் இருந்து வந்த தொந்தரவு நீங்கும். நீங்கள் தொழிலில் அதிக அக்கறை காட்ட வேண்டியிருக்கும்.

அஸ்வினி முதல் ரேவதி வரை: சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் 2026
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசியினருக்கு எப்படி?

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு வேலை இல்லாமல் இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற கால கட்டம் இது. பணத்தை விட அதிக உழைப்பின் மூலம் செய்யும் தொழில் அதிக வருவாய் கிடைக்கும்.

திருவோணம்: இந்த ஆண்டு தீவிர முயற்சியின் பேரிலேயே அரசிடம் இருந்து தான் கோரிக்கைகள் நிறைவேறும். புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த ஆண்டு பாராட்டுகளும் விருதுகளும் கிடைக்கும். தொழிலில் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை. வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கை விட்டுப் போன சொத்துக்கள் மீண்டும் வந்து சேரும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு நன்மைகள் கிடைக்கக் கூடிய கால கட்டமாகும். எடுத்த காரியம் கைகூடும். பணப் புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும்.

சதயம்: இந்த ஆண்டு உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும். உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப பிரச்சனை கட்டுக்குள் அடங்கி இருக்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த ஆண்டு தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கலாம்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த ஆண்டு நண்பர்கள் இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். அவர்களால் உதவிகள் பெறலாம். சுப நிகழ்ச்சிகளுக்கு இப்போது திட்டமிடலாம். வெகு நாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை இப்போது தொடங்கலாம்.

உத்திரட்டாதி: இந்த ஆண்டு புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளை இப்போது தொடங்கலாம். வசதியான வீட்டிற்கு குடிபுகவும் வாய்ப்புண்டு. புதிய ஆபரணங்கள் வாங்கலாம். விருந்து விழா என உல்லாசமாக பயணம் மேற்கொள்வீர்கள். சந்தாண பாக்கியம் ஏற்படும்.

ரேவதி: இந்த ஆண்டு பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சியைக் காணலாம். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் விலகுவார்கள்.

அஸ்வினி முதல் ரேவதி வரை: சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் 2026
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026: மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு எப்படி?

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in