துலாம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026

02.06.2026 முதல் 26.06.2027 வரை
துலாம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026
Updated on
2 min read

வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள் என்ற வரிகளுக்கு ஏற்ப அனைவரையும் நேசித்து பழகும் துலாம் ராசிக்காரர்களே!

குரு பகவான், ஜூன் 02 முதல் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் வந்து அமர்ந்து பலன் தரப்போகிறார். ‘பத்தாம் இடமா..? பதவிக்கே ஆபத்தாச்சே.., வேலையில் பிரச்சினைகள் வருமே' என பயம் வேண்டாம். எதையும் பொறுமையாக கையாண்டாலே போதும். குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் போக்கில் கவனம் செலுத்துங்கள். மகளுக்கு எதிர்பார்த்த இடத்தில் வரன் அமையும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மனக்கசப்பு ஏற்படும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற பழமொழிப்படி, யார் மனமும் கோணாதபடி செயல்படவும். அடுத்தவர் குறையை பெரிதுபடுத்த வேண்டாம். செலவுகளை கட்டுப்படுத்தப் பாருங்கள். பயணங்களால் ஆதாயமுண்டு.

வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். புதிய பதவிகள், பொறுப்புகள் தேடி வந்தால் யோசித்து முடிவெடுங்கள். திட்டமிட்ட வேலையை இரண்டு மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டி வரும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர் களிடம் எச்சரிக்கையாக இருங்கள். மற்ற வர்களை நம்பி முக்கிய வேலைகளை ஒப்படைக்காமல் நீங்களே முன்னின்று முடிக்கப் பாருங்கள். தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் வரும். ஆன் மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அண்டை அயலாருடன் அளவாகப் பழகுங்கள். சொந்த விஷயங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

குரு பகவானின் பார்வை பலன்கள்:

குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால், கம்பீரமாக பேசுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டு. எனினும் வீண் சந்தேகத்தைத் தவிர்த்துவிடுங்கள். பழைய நண்பர்கள் உதவுவார்கள். வரவேண்டிய பணம் வரும்.

குரு பகவான் சுக வீட்டைப் பார்ப்பதால், தாயாருக்கு ஆரோக்கியம் கூடும். தாய்வழியில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். வங்கிக்கடன் கிடைக்கும். சிலர், சொந்த வீடு வாங்க வாய்ப்புகள் உண்டு. குரு பகவான் 6-ம் வீட்டைப் பார்ப்ப தால், திடீர் பணவரவு உண்டு. பழைய கடனை பைசல் செய்வீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும். எனினும் பழைய ஆவணங் களைப் பாதுகாப்பாக வைக்கவும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்களின் தைரிய - சஷ்டமாதிபதியு மான குருபகவான் தனது நட்சத்திரத்தில் 02.06.26 முதல் 18.06.26 வரை பயணம் செய்வதால் வீண் அலைச்சல், காரியத் தடைகள் வரும். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.

சுக - பூர்வபுண்யாதிபதியுமான சனி பகவானின் நட்சத்திரத்தில் 18.06.26 முதல் 19.08.26 வரை குருபகவான் பயணம் செய்வதால் புதிய சொத்துகள் வாங்குவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள்.

உங்களின் பாக்யாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 19.08.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 26.06.27 வரை குருபகவான் பயணம் செய்வதால் தந்தைவழியில் சொத்து வாங்குவீர்கள். சேமிப்புகள் கூடும். புது வேலை கிடைக்கும்.

கேதுவின் நட்சத்திரத்தில் 31.10.26 முதல் 25.01.27 வரை குரு பகவான் செல்வதால் மனக்கவலைகள் தீரும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயமுண்டு. சொந்த ஊரில் உங்களின் செல்வாக்கு உயரும். திடீர் பயணங்கள் உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.

வியாபாரம், உத்தியோகம்: வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை ஏற்படும். சிலர் கடையை விரிவுபடுத்துவர். கமிஷன், உணவுப் பொருள்கள், எலக்ட்ரானிக் பொருள்கள், துணி வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள். கூட்டுத்தொழிலில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பாராத லாபம் கைக்கு வரும். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். பங்குதாரர்களின் ஆலோசனை களை ஏற்று செயல்படுவது நல்லது.

உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும். மேலதிகாரி பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு கூடும் என்றாலும் அளவாகப் பழகுங்கள். கணினி துறையினருக்கு தலைவலி, முதுகுத் தண்டில் வலி வந்து போகும். இளைஞர்கள் வீண் விமர்சனம், வதந்திகளைத் தாண்டி முன்னேறுவார்கள். மூத்த கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். இந்த குருப் பெயர்ச்சி எங்கும் எதிலும் புதுமை படைக்கும் காலமாக அமையும் என்பது திண்ணம்.

குரு பகவான் பரிகார தலங்கள்:

விழுப்புரம் - மடப்பட்டைத் தாண்டி, பண்ருட்டி செல்லும் பிரதான சாலையில் 2 கிமீ தொலைவில் உள்ள திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில் தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். ஆதரவற்ற முதியோருக்கு உணவு, உடை வாங்கிக் கொடுங்கள். சகல செல்வங்களும் கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

துலாம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026
விருச்சிகம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026
துலாம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026
தனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026
துலாம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026
மகரம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026
துலாம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026
கும்பம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in