Published : 13 Jan 2021 11:43 am

Updated : 13 Jan 2021 11:44 am

 

Published : 13 Jan 2021 11:43 AM
Last Updated : 13 Jan 2021 11:44 AM

கடகம், சிம்மம், கன்னி ; வார ராசிபலன்கள் - ஜனவரி 14 முதல் 20ம் தேதி வரை

vaara-rasipalangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம்


(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:

பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - சப்தம ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலைகள் அமைந்திருக்கின்றன.

இந்த வாரம் வாக்கு வன்மையால் நன்மைகள் உண்டாகும்.

செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு உங்கள் செல்வாக்கைக் கண்டு பொறாமை உண்டாகலாம், கவனம் தேவை.

எதிர்ப்புகள் விலகும். காரியத் தடைகள் நீங்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் வேகம் பிடிக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வேலைப் பளு இருந்தாலும் எல்லாப் பணிகளையும் திறம்படச் செய்து முடிப்பார்கள். பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் இருப்பவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

குழந்தைகளால் பெருமைகள் சேரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெண்கள், காரியத் தடைகள் நீங்கி எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு நன்மைகள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு படிக்காமல் விட்ட பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள்.

பரிகாரம்: அம்மனை தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள். மனக்குழப்பம் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும்.
********************

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகநிலைகள் அமைந்திருக்கின்றன. .

இந்த வாரம் எதையும் ஒருமுறைக்கு பலமுறை ஆராய்ந்து முடிவு எடுப்பது நல்லது.

காரியங்களில் தடைதாமதம் உண்டாகலாம். முயற்சிகளில் உடனடியாக பலன்களைக் காண்பது அரிது. எந்வொரு வேலையிலும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும்.
வாகனங்களில் செல்லும்போதும் ஆயுதங்களைக் கையாளும்போதும் கவனம் தேவை. சகோதரர்கள் வழியில் ஏதேனும் பிரச்சினைகள் வரலாம்.

தொழில் வியாபாரம் குறிப்பாக விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் குறைவான லாபம் வரக் காண்பார்கள். தொழில் வியாபரம் தொடர்பான அலைச்சல்கள் இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் கோபம் தூண்டக்கூடிய வகையில் இருக்கலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதும் நன்மைகளைத் தரும்.

பெண்கள், எந்த ஒரு வேலைக்காகவும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு பயணங்கள் ஏற்படும்.

அரசியல்வாதிகளுக்கு புதிய முயற்சிகள் கை கொடுக்கும். மாணவர்களுக்கு எதிர்காலக் கல்வியை பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: சிவபெருமானை வணங்கி வாருங்கள். காரியத்தில் வெற்றி உண்டாகும்.
********************

கன்னி

(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலைகள் அமைந்திருக்கின்றன.

இந்த வாரம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியைத் தரும்.

பணவரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றார்போல் இருக்கும். மற்றவர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும்.

சாதுர்யமாகப் பேசி எதிலும் வெற்றி காண்பீர்கள். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள். பங்கு மார்க்கெட் லாபம் ஓரளவு கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். சிலர் அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். கணவன் மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சிகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

பெண்கள், சாதுர்யமாகப் பேசி எல்லாக் காரியத்தையும் வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பணவரத்து கூடும். அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்வதன் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீஐயப்ப சுவாமியை வணங்கி வாருங்கள். கடன் சுமை குறையும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
*****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!


வார ராசிபலன்கள்ராசிபலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்KadagamSimmamகடகம்சிம்மம்கன்னி ; வார ராசிபலன்கள் - ஜனவரி 14 முதல் 20ம் தேதி வரைகன்னிKanniVaara rasipalangal

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x