

பலன்கள்: ரத்தம் சம்பந்தமான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மன கவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். திட்டமிட்டபடி பயணங்கள் செல்ல முடியும்.
தொழில் ஸ்தானத்தில் கிரகங்கள் வலிமையாக இருப்பதால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அலுவலக வேலைகள் உடனே நடக்கும். நல்ல பெயர் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது.
கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பெண்களுக்கு அதிர்ஷ்டங்கள் ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அரசியல் துறையினருக்கு எதிர்பார்க்கும் பதவிகள் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம்.
அஸ்வினி: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள்.
பரணி: இந்த மாதம் குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்தி சாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய் வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியங்கள் ஒவ்வொன்றாக நடந்து முடியும். பாராட்டுகளால் மன நிம்மதி கிடைக்கும்.
கார்த்திகை 1ம் பாதம்: இந்த மாதம் தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும். தொழிலில் சிறு சிறு இடையூறுகள் ஏற்பட்டு மறையும். அலைச்சல் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதற்கான பலனும் கிட்டும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: பிப்.10, 11 ,12 | அதிர்ஷ்ட தினங்கள்: பிப்.18, 19 |
பலன்கள்: சுமூகமான அணுகுமுறையால் வெற்றி காணும் ரிஷப ராசி அன்பர்களே இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் இருக்கிறார். ஆனாலும் மற்ற கிரகங்கள் அனைத்தும் அனுகூலமாக இருக்கிறார்கள். குரு பார்வையால் நல்ல யோகமான பலன்களைப் பெற போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் இருக்கும் கவலைகள் அகலும்.
சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கு இடையே உறவு பலப்படும்.
பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். கலைத் துறையினருக்கு வீண் அலைச்சல் இருக்கும். நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். அரசியல் துறையினருக்கு புதிய முயற்சிகள் கை கொடுக்கும். மாணவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் செலுத்துவது குறைய கூடும்.
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் காரிய தடை, தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது. குடும்ப பிரச்சனைகள் தீரும். எதுவும் வரட்டும் பார்க்கலாம் என்ற முரட்டு தைரியம் கூடாது. பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நற்பலன்களே உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள்.
ரோகிணி: இந்த மாதம் எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். உங்களின் புத்தி சாலித்தனத்தால் சில சாதனைகளைச் செய்து முடிப்பீர்கள். புது முயற்சிகளில் ஈடுபட காலம் கணிந்துள்ளது.
மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டிப்பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்த சேரும். வருமானம் கூடும். பாராட்டு கிடைக்கும். அதனால் மனதிருப்தி உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனை பூஜிக்க வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: பிப்.13, 14 | அதிர்ஷ்ட தினங்கள்: பிப்.20, 21 |
பலன்கள்: எதிலும் நிதானமாக முடிவெடுக்கும் திறமை உடைய மிதுன ராசி அன்பர்களே இந்த மாதம் ராசிநாதன் புதன் பாக்கிய ஸ்தானத்தில் பாதசார சஞ்சாரம் உங்களுக்கு சாதகமான அமைப்பைக் காட்டுகிறது. பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்தி சாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும்.
உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும்.
குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள். பெண்களுக்கு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவார்கள். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் குடுமபத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கு இடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை. பொருளாதார நிலை முன்னேற்றம் அடையும்.
திருவாதிரை: இந்த மாதம் மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. எதிலும் எச்சரிக்கை தேவை. காரிய தடை தாமதம் வரலாம். எனினும் உடன் பணிபுரிபவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது சிறந்தது. உங்களின் ஆர்வமும் அக்கறையும் மற்றவரை பிரம்மிப்படைய வைக்கும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த மாதம் குடும்ப பிரச்சனை தீரும். ஒரு முறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நன்மை தரும். பணவரவு உண்டு. ஆனால் வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை. முடிக்க வேண்டிய காரியங்களை செவ்வனே செய்வீர்கள். அரசாங்கம் சார்ந்த உதவிகள் எளிதாக கிடைக்கும்.
பரிகாரம்: பெருமாளை புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்து வணங்க திருமண தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: பிப்.15, 16, 17 | அதிர்ஷ்ட தினங்கள்: பிப்.22, 23 |
இந்த மாதம் கிரகங்களின் நிலை
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.