Published : 25 Mar 2023 05:34 AM
Last Updated : 25 Mar 2023 05:34 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போகவும். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்தி னால் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.

ரிஷபம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாருக் காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். நீண்ட நாட்களாக மனதை உறுத்திய பிரச்சினை முடிவுக்கு வரும்.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். நண்பர்களுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும்.

கடகம்: சிந்தனைத் திறன் பெருகும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பழைய பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். கல்யாண பேச்சுவார்த்தை கைகூடும். தேவையில்லாத அலைச்சல் இருக்கும்.

சிம்மம்: தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். உறவினர் களால் நன்மை உண்டு. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பழைய கடனில் ஒன்றை தீர்ப்பதற்கு வழிவகை ஏற்படும்.

கன்னி: உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். பணவரவு உண்டு.

துலாம்: நிர்வாகத் திறமை வெளிப்படும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர் பார்த்த உதவி கிடைக்கும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். பூர்வீக சொத்துப் பிரச்சினை தீரும்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பொது காரியங்களில் ஈடுபடு வீர்கள். கலை பொருட்கள் சேரும்.

தனுசு: பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். நட்பு வட்டம் விரியும். வீடு, வாகன பராமரிப்பால் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மகரம்: அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

கும்பம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வாகன வசதி பெருகும். சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். ஓரளவு பணவரவு உண்டு.

மீனம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்சினை களுக்கு தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணம் வாங்கு வீர்கள். பழைய சொந்த - பந்தங்கள் தேடி வருவார்கள். பிறர் விஷயங்களில் தலையிட வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x