Published : 11 Oct 2020 08:42 AM
Last Updated : 11 Oct 2020 08:42 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வீடு மாற நினைத்தவர்களுக்கு நல்ல வசதியுடன் வீடு கிடைக்கும். சிலர் வாகனம் வாங்குவீர்கள். அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு சாதகமான தகவல் கிடைக்கும்.

ரிஷபம்: தொட்ட காரியங்கள் துலங்கும். உடன்பிறந்தவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வீடு, மனை வாங்க முன்பணம் தருவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

மிதுனம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். விஐபி.களின் நட்பால் சில காரியங்கள் நிறைவேறும். வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும்.

கடகம்: யாரையும் எளிதில் நம்பி ஏமாந்து விடாதீர்கள். யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தரவேண்டாம். வாகன செலவு திட்டமிட்டதை விட அதிகரிக்கும்.

சிம்மம்: பணம் ஒருவகையில் வந்தாலும் செலவுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.

கன்னி: எதிர்காலத்துக்கான பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். கடன் தொகை வசூலாகும். சமூகத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வீட்டை மாற்றியமைக்க திட்டமிடுவீர்கள்.

துலாம்: பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்துவந்த காரியங்கள் இன்று நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள்.

விருச்சிகம்: மாறுபட்ட அணுகுமுறையால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தக்க நேரத்தில் விஐபிகளும் உதவிகரமாக இருப்பார்கள். பணப் பற்றாக்குறையால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.

தனுசு: செல்போனில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்குவதை தவிர்த்து விடுங்கள். ஒரே நாளில் பல வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்க வேண்டி வரும். பணவரவு உண்டு.

மகரம்: போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும்.

கும்பம்: பிரச்சினைகள், சிக்கல்கள், உடல் சோர்வு என்று வந்தாலும் எதையும் சாமர்த்தியமாக சமாளிக்கும் சக்தி கிடைக்கும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

மீனம்: பிள்ளைகளால் உற்சாகமடைவீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். வீடு, மனை வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x