Published : 07 May 2025 06:17 AM
Last Updated : 07 May 2025 06:17 AM
மேஷம்: அடுக்கடுக்காக இருந்து வந்த செலவுகள் இனி குறையும். சவாலான காரியங்களையும் எடுத்து முடிப்பீர். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு.
ரிஷபம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
கடகம்: எதிர்பார்த்து காத்திருந்த பணம் வரும். பழுதான பொருட்களை மாற்றுவீர். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைப்படி வியாபாரத்தில் செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் உங்களின் தரம் ஒருபடி உயரும்.
சிம்மம்: முன்கோபம், அலைச்சல் இருக்கும். தாயார், பிள்ளைகளின் உடல்நிலை பாதிக்கும். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்ப்பீர்கள்.
கன்னி: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.
துலாம்: உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரும். சகோதரர்கள் பண உதவி செய்வார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.
விருச்சிகம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்களில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்ப்பீர்.
தனுசு: புதியவர்கள் அறிமுகமாவர். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். பூர்வீக சொத்து வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
மகரம்: குடும்பத்தாருடன் விவாதங்களை தவிர்க்கவும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படவும்.
கும்பம்: திட்டமிட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரம் ஓரளவு லாபம் தரும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். பொறுப்புகள் கூடும்.
மீனம்: சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர். தாய்வழி உறவினரால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூற வேண்டாம்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT