Published : 23 Nov 2023 06:00 AM
Last Updated : 23 Nov 2023 06:00 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள்.

ரிஷபம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் எதிர்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பழைய வாகனம் செலவு வைக்கும்.

மிதுனம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வழக்குகள் சாதகமாகும்.

கடகம்: நீண்ட நாளாக இருந்துவந்த மனக் குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். குடும்பத்தினரின் எண்ணங்களை ஒவ்வொன்றாக பூர்த்தி செய்வீர்கள்.

சிம்மம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம்.

கன்னி: நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பணப் பற்றாகுறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் குறைகளை சுட்டிக் காட்டி நல்வழிப்படுத்துவீர்கள்.

துலாம்: உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டுகள் குவியும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள்.

விருச்சிகம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவதால் குழப்பங்கள் தீரும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவுக் கரம் நீட்டுவர்.

தனுசு: அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்க முயற்சி செய்வீர்கள்.

மகரம்: உங்களின் குறிக்கோளை எட்டிப் பிடிக்க முயற்சிப்பீர்கள். பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அளவாகப் பேசிப் பழகவும். பணவரவு உண்டு.

கும்பம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு உண்டு. விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி தங்கும். வீட்டில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வீர்கள். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும்.

மீனம்: உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். அடுத்தவர்கள் மனது காயப்படும்படி பேசாதீர். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x