Published : 23 Jun 2023 05:47 AM
Last Updated : 23 Jun 2023 05:47 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள்.

ரிஷபம்: வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உறவினர், நண்பர் மத்தியில் மதிப்பு கூடும்.

மிதுனம்: சேமிப்புகள் அதிகமாகும். குடும்பத்தில் உள்ள வீண் விவாதங்கள் விலகும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். பழைய கடனில் ஒன்று தீரும். நண்பர்கள் ஆதரவுக் கரம் நீட்டுவர்.

கடகம்: வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். சொந்த - பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

சிம்மம்: தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். அடுத்தவர் மனது காயப்படும்படி பேசாதீர்கள். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசவும்.

கன்னி: உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. குடும்ப விஷயங்களை அடுத்தவர்களிடம் கூறிக் கொண்டிருக்காதீர்கள்.

துலாம்: சந்தர்ப்ப, சூழ்நிலையை புரிந்துக் கொண்டு சமயோஜிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். உடன்பிறந்தவர்கள், நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.

விருச்சிகம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிரபலங்கள் உதவுவார்கள். பணவரவு உண்டு.

தனுசு: தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உறவினர் ளிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மகரம்: முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

கும்பம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். புதியவர்கள் அறிமுகம் கிடைக்கும். பணவரவு உண்டு.

மீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கில் திருப்பம் ஏற்படும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x