Published : 22 Apr 2021 02:06 PM
Last Updated : 22 Apr 2021 02:06 PM

மகரம், கும்பம், மீனம் ; ஏப்ரல் 22  முதல்  ஏப்ரல் 28ம் தேதி வரை - வார ராசிபலன்கள்

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

ராசியில் சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (அ.சா) - சுக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது என கிரக அமைப்பு உள்ளது.

இந்த மாதம் 28ம் தேதி - புதன்கிழமை அன்று புத பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார்.

இந்த வாரம் கடினமான பணிகளையும் எளிதாகச் செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும்.

புதனின் சஞ்சாரம் பணவரத்தைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் தடங்கல்கள் அகலும் . புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.

குடும்பத்தில் விருந்தினர்கள் வருகை இருக்கும். வீட்டிற்குத் தேவையானப் பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்கள்.

பெண்களுக்கு உங்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. அரசியல்துறையினர் வீண்பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மை தரும். கலைத்துறையினருக்கு நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும்.

மாணவர்கள் முதல்தர மாணவனாக தேர்ச்சி பெறுவார்கள். படிப்பினில் ஆர்வம் காட்டி பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தருவர்.

அதிர்ஷ்ட கிழமைகள்: : திங்கள், வெள்ளி;
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: பெருமாளை தரிசித்து வணங்கி வர எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும்.
**************

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

ராசியில் குரு (அ.சா) - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், புதன் - சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக அமைப்பு உள்ளது.

இந்த மாதம் 28ம் தேதி - புதன்கிழமை அன்று புத பகவான் சுக ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார்.

இந்த வாரம் நல்ல பலன்கள் உண்டாகும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த பிரச்சினைகளில் சாதகமான நிலை காணப்படும். தானதர்மம் செய்யவும் ஆன்மிகப் பணிகளில் ஈடுபடவும் தோன்றும்.

நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்துச் செல்வதன் மூலம் எல்லாப் பிரச்சினைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கியமான பணிகளை மேற்கொள்வீர்கள்.

உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும்.
கலைத்துறையினருக்கு மனோ தைரியம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய எண்ணங்கள் மேலோங்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்;
திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: நீலம், பச்சை
எண்கள்: 2, 6
பரிகாரம்: விநாயகப் பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனக்கஷ்டம் தீரும்.
**********

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், புதன் - தைரிய ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் குரு (அ.சா) என கிரக அமைப்பு உள்ளது.

இந்த மாதம் 28ம் தேதி - புதன்கிழமை அன்று புத பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார்.

இந்த வாரம் கோபமான பேச்சு, டென்ஷன் ஆகியவை குறையும். எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் வேகம் உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும்.

சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும்.

பெண்களுக்கு எடுத்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். கலைத்துறையினர் மனதில் எதைப்பற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும். மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி;
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3
பரிகாரம்: தினமும் அபிராமி அந்தாதி சொல்லி அம்மனை வணங்கினால் கஷ்டம் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
**************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x