Published : 22 Apr 2021 12:34 PM
Last Updated : 22 Apr 2021 12:34 PM

துலாம், விருச்சிகம், தனுசு ; ஏப்ரல் 22  முதல்  ஏப்ரல் 28ம் தேதி வரை - வார ராசிபலன்கள்

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம ஸ்தானத்தில் குரு (அ.சா) - சப்தம ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக அமைப்பு உள்ளது.

இந்த மாதம் 28ம் தேதி - புதன்கிழமை அன்று புத பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார்.

இந்த வாரம் எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும்.

பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்தக் காரியத்தை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழிலுக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் பணியாளர்களிடம் நீங்கள் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி உங்கள் செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும். குடும்பத்தில் திருமணம் ஆனவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். வயது வந்த புத்திரர்கள் உள்ளவர்களுக்கு நல் உதவிகளும் கிடைக்கப்பெறும்.

தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆயுள் அபிவிருத்தி அடைவதற்கான வகையில் கிரகங்கள் கெயல்பட உள்ளதால் அதற்கேற்றவாறு பழக்கவழக்கங்களை அமைத்துக்கொள்ளுங்கள்.

பெண்கள் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலில் மேன்மை பெறுவார்கள். கலைத்துறையினர் நிறைவான பொருளாதாரம் பெறுவார்கள். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்துடன் சுமுகமான உறவு ஏற்படும்.

மாணவர்கள் சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். பாடங்களில் கவனம் செலுத்துவது அதிகரிக்கும்

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று வரவும். மல்லிகை மலரை சார்த்தி வழிபடவும்
~~~~~~~~~~

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)

ராசியில் கேது - தைரிய ஸ்தானத்தில் சனி - சுகஸ்தானத்தில் குரு (அ.சா) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், புதன் - களத்திர ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக அமைப்பு உள்ளது.

இந்த மாதம் 28ம் தேதி - புதன்கிழமை அன்று புத பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார்.

இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும்.

பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். தொழிலதிபர்கள் புதிய வாடிக்கையாளர்களை நிரம்ப பெறுவார்கள். நன்மதிப்பும் பொருளாதார உயர்வும் பெறுவார்கள்.

உத்தியோகஸ்தர்கள்: அரசு மற்றும் தனியார்துறைகளில் பணிபுரிபவர்களின் செயலில் இருந்த மந்தநிலைகள் நீங்கி சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும். குடும்பத்தில் கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் அனுகூலப் பயன்கள் உண்டாகும்.

உறவினர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு சிறிது பொறாமைப்படுவார்கள். பெண்களுக்கு சீரான வாய்ப்புகள் வரும். குழப்பமான மனநிலை அகலும். கலைத்துறையினர் முன்யோசனையுடன் திட்டமிடுவது அவசியம்.

அரசியல்வாதிகளுக்கு புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். திறமையுடன் காரியங்களைச் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி;
திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்
எண்கள்: 2, 9
பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்கு அடிக்கடி சென்று 11 முறை வலம் வந்து வேண்டிக் கொள்ளுங்கள்.
~~~~~~~~~~~

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (அ.சா) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக அமைப்பு உள்ளது.

இந்த மாதம் 28ம் தேதி - புதன்கிழமை அன்று புத பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார்.

இந்த வாரம் வீண் அலைச்சல் குறையும். எடுத்தக் காரியத்தை செய்து முடிப்பதில் இருந்த தடங்கல் நீங்கும்.

தேவையற்ற மனக்கவலை அகலும். வழக்கு விவகாரங்களில் வேகமான போக்கு காணப்படும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.

தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு நீங்கும். கிடப்பில் இருந்த கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தைத் தருவதாக இருக்கலாம். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நன்மையைத் தரும்.

கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம். கவனம் தேவை. பணிபுரியும் பெண்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து கொட்டும். அரசியல்வாதிகளுக்கு தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு தேவையான பொருளாதார வசதிகள் தன்னிறைவாய் கிடைக்கும். மற்றவர்கள் பாராட்டும் வண்ணம் உங்கள் செயல்பாடுகள் இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி;
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: ஸ்ரீமஹாகணபதியை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது கவலையைப் போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலைப்பளு நீங்கும்.
*************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x