Published : 10 Nov 2020 12:03 PM
Last Updated : 10 Nov 2020 12:03 PM

அஸ்தம்  நட்சத்திரக்காரர்களே! குருப்பெயர்ச்சி பலன்கள்; தன்னம்பிக்கை கூடும்; தொழிலில் எதிர்பாராத சிக்கல்; மனம் வருந்தும் சூழல்; உத்தியோக மாற்றம்! 

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

அஸ்தம்:

குரு பகவான் உங்களின் ஒன்பதாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.

இடுக்கண் வருங்கால் நகுக என்பதற்கேற்ப துன்பங்கள் வந்தாலும் அதனை மனதுக்குள் மறைத்து வெளியில் மகிழ்ச்சியைக் காண்பிக்கும் திறனுடைய அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சியில் பல வகையிலும் நற்பலன்கள் ஏற்படும். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
எல்லோரிடமும் கவனமாகப் பேசுவது நல்லது. வீண்பழி உண்டாகலாம். வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவச் செலவு உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலைச் சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.

பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு சுப விரயம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்விக்காகச் செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.

பரிகாரம்: குலதெய்வ வழிபாடு குழப்பங்களைத் தீர்க்கும்.

மதிப்பெண்கள்: 78% நல்லபலன்கள் ஏற்படும்.

*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x