Published : 09 Nov 2020 08:10 PM
Last Updated : 09 Nov 2020 08:10 PM

பூரம் நட்சத்திரக்காரர்களே! குருப்பெயர்ச்சி பலன்கள்; காரிய தாமதம்; வாழ்க்கைத் துணையிடம் கருத்து வேற்றுமை; வியாபாரத்தில் தொய்வு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பூரம்:

குரு பகவான் உங்களின் பதினொன்றாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.

திட்டமிட்டு செயல்பட்டு எதிலும் வெற்றி பெறும் பூரம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!

நீங்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண கடுமையாக உழைப்பவர்கள். இந்த குருப் பெயர்ச்சியில் காரியதாமதம் ஏற்படக்கூடும். வீண் பிரச்சினைகள் ஏற்படும்.
அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மை தரும். ஏற்கெனவே பாதியில் நின்ற பணிகள் நடக்கும். விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கலாம்.

தொழில் வியாபாரத்தில் தொய்வு காணப்படும். விட்ட இடத்தைப் பிடிக்க பாடுபட வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு, வீண் அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்காக வாக்குவாதம் செய்து அமைதியைக் குறைப்பார்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனம் தேவை.

பிள்ளைகளிடம் அன்பாகப் பேசிப் பழகுவது நல்லது. பெண்கள் பாதியில் நின்ற காரியங்களை விரைவாகச் செய்து முடிப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் வரும். அரசியல்வாதிகளுக்கு நண்பர்கள் மூலமாக நன்மைகள் ஏற்படும்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற நீண்ட நேரம் ஒதுக்கி பாடங்களைப் படிக்க வேண்டி வரும்.

பரிகாரம்: ஆண்டாள் வழிபாடு நன்மை தரும். குடும்ப நன்மையை, ஒற்றுமையை மேம்படுத்தித் தரும்.

மதிப்பெண்கள்: 67% நல்லபலன்கள் ஏற்படும்.

*********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x