Published : 04 May 2020 02:12 PM
Last Updated : 04 May 2020 02:12 PM

மூலம், பூராடம், உத்திராடம் ; (மே 4 முதல் 10 வரை) - இந்தவாரம் உங்களுக்கு இப்படித்தான்! 

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


மூலம் -
அதிக நன்மைகள் ஏற்படும் வாரம் . ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும்.
எடுத்துக்கொண்ட முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். அலுவலகப் பணியில் இயல்பான நிலையே இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பெண்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.
சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காண்பார்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் நண்பர்களால் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். தொழில் தொடர்பான முக்கிய நபரை சந்திப்பதால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள்.
.

செவ்வாய் -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். அலுவலகத்தில் வரவேண்டிய நிலுவைத் தொகை கிடைக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

புதன் -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். எதிர்பார்த்த அத்தனை உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். எடுத்துக்கொண்டு வேலைகள் அனைத்தையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். இளைய சகோதரரிடம் மனம் விட்டுப் பேசி சொத்து பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்வீர்கள்.

வியாழன்-
எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் பொறுமை காப்பது நல்லது. பேச்சுவார்த்தைகள் ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள். பயணங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்த்து விடுங்கள்.

வெள்ளி -
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் மனநிறைவைத் தரும். அசையாச் சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பீர்கள்.

சனி-
குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். அத்தியாவசியமான பொருட்களை வாங்குவீர்கள். பழுதடைந்த பொருட்களை மாற்றி புதிதாக வாங்குவீர்கள்.

ஞாயிறு -
எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணம் பல வழிகளிலும் வரும். வியாபாரம் வளர்ச்சி அடையும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
குரு பகவானை வழிபாடு செய்யுங்கள். குரு ஸ்தானத்தில் இருக்கும் குருமார்களை வணங்குங்கள். சித்தர்கள் வழிபாடும் நன்மைகளை தரும்.
*************************************


பூராடம் -
மனதை அழுத்திக் கொண்டிருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். எதிர்ப்புகள் குறையும்.
ஆரோக்கியத்தில் சிறுசிறு அச்சுறுத்தல் வந்துபோகும். உத்தியோகத்தில் இயல்பான நிலையே தொடரும். தொழில் தொடர்பான அனைத்து உதவிகளும் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். இப்போது இருக்கும் வியாபாரத்தையே மேலும் விரிவுபடுத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும்.
பெண்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தினர் நிலை மற்றும் எதிர்காலம் கருதி அச்சம் தோன்றும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு பேச்சுவார்த்தைகள் தொடரும். ஒப்பந்தங்கள் ஏற்படுவது தாமதம் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். வியாபாரம் வளர்ச்சி அடையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.

செவ்வாய் -
அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியரின் வேலையைச் செய்ய வேண்டியது வரும்.நீண்ட நாள் நண்பர் ஒருவரால் ஆதாயம் உண்டாகும்.

புதன் -
நெருக்கடி தந்த கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வியாழன்-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்திலும் சில பின்னடைவுகள் ஏற்பட்டாலும் சரியாக செய்து முடிப்பீர்கள். வியாபார பேச்சுவார்த்தைகளில் தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான முடிவு ஏற்படும்.ஒரு சிலருக்கு சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். நெருங்கிய நண்பர்களுக்கு உதவி செய்ய வேண்டியது வரும்.

வெள்ளி -
தொலைபேசி வழித் தகவல் மனதிற்கு உற்சாகத்தைத் தரும்.தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களால் ஆதாயமும் உண்டு. எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.

சனி-
அதிக நன்மைகள் நடைபெறும். பண வரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். குழந்தைகளின் ஆரோக்கியப் பிரச்சினைகள் தீரும். அவர்களுக்கான மருத்துவ செலவுகள் வெகுவாகக் குறையும்.

ஞாயிறு -
சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். தரகு மற்றும் கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
பைரவர் வழிபாடும், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் வழிபடும் நன்மைகளை ஏற்படுத்தித்தரும். எதிர்ப்புகளே இல்லாமல் செய்யும். பணவரவு எதிர்பார்த்த படியே இருக்கும்.
*********************************************

உத்திராடம் -
அதிக முயற்சிகள் இல்லாமலேயே எல்லா வேலைகளும் சுமுகமாக நடைபெறும்.
கிடைக்கின்ற தகவல்கள் அனைத்தும் முன்னேற்றமான தகவல்களாகவே இருக்கும். குடும்பத்தில் இதுவரை ஏற்பட்டு இருந்த மனக்கசப்புகள் நீங்கும். கணவன்-மனைவி ஒற்றுமை பலப்படும்.
திருமணமாகி நீண்ட நாட்களாக புத்திரபாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். சகோதரர்களால் ஏற்பட்டிருந்த சண்டை சச்சரவுகள் அனைத்தும் இப்போது முடிவுக்கு வரும். ஒற்றுமை பலப்படும்.
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடிகள் முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான அனைத்து உதவிகளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
பெண்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கும். குழந்தைகளின் கல்வி தொடர்பான வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காண்பார்கள். கலைஞர்களுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
வியாபார பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். சொத்துக்கள் விற்பனை சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். வணிகத்தில் வளர்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.


செவ்வாய்-
பயணங்கள் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். உடலில் அசதி சோர்வு ஏற்படும்.தேவையற்ற செலவுகள் ஏற்படும்.மற்றவர்களால் கோபத்துக்கும் எரிச்சலுக்கும் ஆளாவீர்கள். எனவே அமைதியாக இருப்பது நல்லது.

புதன் -
எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகள் ஏற்படும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். கூட்டுத்தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஆதாயம் பெருகும்.

வியாழன் -
வங்கியில் எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். நெருக்கடி தந்து கொண்டிருந்த முக்கியமான பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகள் வியாபாரத்தில் லாபம் அதிகம் கிடைக்கப் பெறுவார்கள்.சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதிக்கு இன்று நல்ல தகவல் கிடைக்கும்.

வெள்ளி-
எதிர்பார்த்த உதவிகள் மட்டுமின்றி எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும்.புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும்.

சனி-
தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். அடுத்தவர் விஷயங்களில் கருத்துக்கள் சொல்லாமல் இருப்பது நல்லது. செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன் நன்றாக படித்துப் பார்க்க வேண்டும்.

ஞாயிறு -
இதுவரை வராமல் இருந்த பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். சகோதரர்கள் சொத்துப் பிரச்சினையில் உங்களுக்கு இணக்கமாக இருப்பார்கள். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.புதிய வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சூரிய வழிபாடு செய்யுங்கள். ஆதித்ய ஹிருதயம் அதிகாலையில் கேளுங்கள். சூரிய பகவானுக்கு உளுந்த வடை நைவேத்தியம் செய்து தானம் தாருங்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நினைத்தது நிறைவேறும்.
****************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x