Published : 27 Apr 2020 04:35 PM
Last Updated : 27 Apr 2020 04:35 PM

பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி (ஏப்ரல் 27 முதல் மே 3 வரை) - இந்தவாரம் உங்களுக்கு இப்படித்தான்! 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

பூரட்டாதி -
நன்மைகள் அதிக அளவில் நடைபெறும் வாரம்.
குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். திருமணமான தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். மாமனார் வழி சொத்துக்கள் கிடைக்கும்.
அலுவலகப் பணியில் கடந்த சில நாட்களாக இருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
தொழிலில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப்பெறுவார்கள்.
குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சில சச்சரவுகள் முழுமையாக நீங்கும். பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பார்கள்.
பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இரு மடங்கு கிடைக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். புத்திர பாக்கியம் தொடர்பான தகவல் மனமகிழ்ச்சியைத் தரும்.

செவ்வாய்-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். ஆரோக்கியத்தில் இருந்த அச்சுறுத்தல் விலகும். மன நிம்மதியும் மனநிறைவும் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும்.


புதன் -
புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். அலுவலகப் பணிகளில் உங்கள் பணிகளை மட்டும் கவனியுங்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஒரு சில ஏமாற்றங்களை சந்திக்க வேண்டியது வரும். நிதானத்தை இழக்கக்கூடாது.

வியாழன் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சொத்து தொடர்பான விஷயங்கள் நல்ல முடிவு கிடைக்கும்.

வெள்ளி -
உற்சாகமான நாளாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தேங்கி நின்ற வேலைகள் அனைத்தையும் இன்று சுறுசுறுப்பாக செய்து முடித்து விடுவீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். வியாபராத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

சனி-
குடும்ப நலன் சார்ந்த சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சோம்பல் அதிகரிக்கும். தேவையற்ற விஷயங்களில் மனதைச் செலுத்தி குழப்பிக் கொள்வீர்கள். பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு -
பெரும் நன்மைகள் ஏற்படும் நாள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்டு வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக முக்கிய தகவல் கிடைக்கும். அது மனநிறைவைத் தருவதாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
கோளறு பதிகம் படியுங்கள். நவக்கிரக ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். வணங்கி வாருங்கள். நன்மைகள் நடக்கும். நினைத்தது நிறைவேறும்.
*****************************************

உத்திரட்டாதி -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை ஏற்படும். சொத்துக்கள் தொடர்பான விஷயங்கள் பேசி முடிக்கப்படும். பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும்.
திருமணமாகாத இளைய சகோதரருக்கு திருமணம் உறுதி செய்யப்படும். தாய்மாமன் வகையில் ஏற்பட்டு இருந்த மனவருத்தங்கள் அகலும்.
அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும். புதிய வியாபார வாய்ப்புகளும் கிடைக்கும்.
பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உறுதியாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

செவ்வாய்-
எதிர்பார்த்த தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். உதவிகள் அதிகம் கிடைக்கப்பெறுவீர்கள். மருத்துவச் செலவுகள் கணிசமாக குறையும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

வியாழன் -
அலுவலகப் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில்- வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். பெண்களுக்குத் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக இருக்கும்.

வெள்ளி -
பொறுமை, நிதானம் மிக அவசியம். உணர்ச்சிவசப்பட்டு எந்தச் செயலையும் செய்ய வேண்டாம்.அவசர முடிவுகளை எடுக்காதீர்கள். யாருக்கும் வாக்குறுதி கொடுக்காதீர்கள்.

சனி-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். ஊழியர்களுக்கு ஒரு சில சலுகைகளைச் செய்து தருவீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

ஞாயிறு -
தாமதமாகிக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் செய்து முடிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வீடு விற்பது வாங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
லட்சுமி நரசிம்மர் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் கூடுதலாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
******************************************


ரேவதி -
திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிக்கும் வாரம்.
குடும்பத்தில் ஏற்பட்டிருந்த ஒரு சில பிரச்சினைகளும் இந்த வாரம் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட இந்த பாதிப்புகள் முற்றிலுமாக விலகும். தாயாரின் உடல் நலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.
இளைய சகோதரருக்கு திருமணம் உறுதியாகும். அலுவலகப் பணியில் இயல்பான நிலையே நீடிக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
வியாபாரிகளுக்கு வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும். பெண்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள்.
திருமண முயற்சிகள் கைகூடும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் ஒப்பந்தங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் காண்பார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
நிதானத்தை இழக்கக்கூடாது. அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். காசோலைகளைக் கவனமாக கையாளுங்கள். கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகளில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் நிதானப் போக்கை கடைபிடிக்க வேண்டும். குடும்பத்தினருடன் இயல்பாக இருக்கப் பாருங்கள்.

செவ்வாய்-
சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்களில் சுமுகமான நிலை ஏற்படும். தொழில் தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.

புதன்-
தர்ம காரியம் சிந்தனைகள் தோன்றும். உங்களால் முடிந்த அளவுக்கு ஒரு சில உதவிகளையும் செய்து தருவீர்கள். தூரத்து உறவினர்களுக்கு பண உதவி செய்வீர்கள். குலதெய்வ வழிபாடு பற்றிய சிந்தனை தோன்றும். அதற்கான திட்டமிடல் இப்போதே போடுவீர்கள்.

வியாழன் -
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை உயரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும்.

வெள்ளி-
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மருத்துவச் செலவு வெகுவாக குறையும். தாயாரின் உடல்நலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.

சனி -
உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படும். நெருங்கிய உறவினர்களிடம் ஒரு சில உதவிகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த பணவரவு இன்று வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். திருமணம் தொடர்பான முயற்சிகள் இன்று சுமுகமான முடிவுக்கு வரும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.


வணங்க வேண்டிய தெய்வம் -
சிம்ம வாஹினி துர்கை அம்மனை வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
*******************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x