Published : 24 Apr 2020 08:36 AM
Last Updated : 24 Apr 2020 08:36 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்

கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பம் ஏற்படும். நீங்கள் நகைச்சுவைக்காக பேசுவதுகூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது.

ரிஷபம்

விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண முயற்சிப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

மிதுனம்

வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வேலைச் சுமை குறையும். பதற்றம் தணியும்.

கடகம்

உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொல்லைகள் அகலும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். குடும்பத்தினருடன் ஆன்மிகப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.

சிம்மம்

பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். பணம் வரவு உயரும்.

கன்னி

மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். முன்கோபத்தை குறைப்பது நல்லது.

துலாம்

சாதுர்யமாக பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்த பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். மனைவிவழி .உறவினரால் நன்மை உண்டு.

விருச்சிகம்

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மூத்த சகோதரருடன் இருந்த மோதல் விலகும்.

தனுசு

மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்க முயலுங்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும்.

மகரம்

சொத்து பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காண்பீர்கள். பணவரவு திருப்தி தரும். வாகனத்தை சீர்செய்வீர்கள். தந்தைவழி உறவினரால் ஆதாயமுண்டு.

கும்பம்

கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் திறமைகளை ஊக்குவிப்பீர்கள். சகோதரர் பணம் தந்து உதவுவார். அக்கம்பக்கத்து வீட்டாரின் தொல்லை விலகும்.

மீனம்

எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அரசு காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x