Last Updated : 16 May, 2024 01:47 PM

 

Published : 16 May 2024 01:47 PM
Last Updated : 16 May 2024 01:47 PM

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ மே 16 - 22

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன், புதன் - லாப ஸ்தானத்தில் சூரியன், குரு என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 20-05-2024 அன்று சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: கடக ராசி அன்பர்களே! இந்தவாரம் குடும்பத்தில் சற்று பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். எடுத்தோம் கவிழ்த்தோம் என அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வெளியிடங்களுக்குச் செல்லும் போதும் பயணங்கள் மேற்கொள்ளும் போதும் தங்கள் பணம் உடைமைகள் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.

மனதில் நிம்மதி இருக்காது. பிறரிடம் பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில் தாங்களே எதிர்பாராமல் கோபப்பட்டு விடுவீர்கள். அதை தவிர்த்திடுங்கள். நிதி நிலையில் மாற்றம் இருக்காது என்றாலும் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.

தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்படலாம். வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். குடும்பத்தில் சில பொருள்கள் களவு போக வாய்ப்பு உள்ளது.

அன்பர்கள் சிலர் தங்களின் குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்வதற்கு சாதகமாக கிரக நிலைகள் அமைந்துள்ளன. பெண்கள் முன்பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி படிப்பது நல்லது.

பரிகாரம்: தினமும் அஷ்ட லட்சுமியை வணங்கி வாருங்கள். தாமரை மலர் கொண்டு பூஜியுங்கள் | அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள், வியாழன்

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஸ்தானத்தில் ராகு, செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், புதன் - தொழில் ஸ்தானத்தில் சூரியன், குரு என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 20-05-2024 அன்று சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் அன்பர்கள் இவ்வாரம் பிறருக்கு கடன் கொடுக்கவோ அல்லது ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். அதனால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். தாயார் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருந்தால் இப்போது சரியாகிவிடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்க பெறுவார்கள்.

சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். தொழில்துறையினருக்கு சக பாகஸ்தர்களினால் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவை பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது. விஸ்தரிப்பு திட்டங்களில் இந்த வாரம் இறங்க வேண்டாம்.

வியாபாரிகள் புதிய முயற்சிகள் எதிலும் இந்தவாரம் இறங்க வேண்டாம். பொறுமை அவசியம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை காணப்படும். அதற்கு காரணம் வீட்டில் ஏற்படும் சண்டை சச்சரவுகளும் எதிர்பாராத ஏமாற்றங்களுமேயாகும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். செலவுகள் ஏற்பட்டாலும் அதை சமாளித்து விட முடியும்.

வாடகை வீட்டிலிருந்து வரும் அன்பர்கள் சிலர் இப்போது வேறு வீடு மாற வேண்டியிருக்கும். மாணவமணிகள் விடுமுறை நாட்களில் அதிகநேரம் வெயிலில் விளையாட வேண்டாம் பெண்மணிகள் கவனமாக இருக்கவும்.

பரிகாரம்: சிவாலயத்திற்கு சென்று நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுங்கள் | அதிர்ஷ்டகிழமைகள்: ஞாயிறு, திங்கள்

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் ராகு, செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், குரு என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 20-05-2024 அன்று சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் வெளிநாடுகளில் வசித்து வரும் உறவினர்கள் இப்போது தங்கள் இல்லத்திற்கு வந்து செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வருவது நல்லது.

பணப் பொறுப்புகளில் உள்ளவர்கள் கூடுதல் கவனத்தை செலுத்தி வருவது அவசியம். எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி ஒன்று வரும். தொழிலில் புதிய விஸ்தரிப்பு திட்டங்களில் தடைகள் ஏற்படக்கூடும். ஆனாலும் தொழில் பாதிக்கப்படாது. தொழில் துறையினருக்கு நிலுவையிலிருந்த பணம் இப்போது கைக்கு கிடைப்பது சந்தோசத்தை தரும்.

குடும்பத்தில் பண வரவிற்கு குறைவு இராது. சென்ற வாரம் ஏற்பட்ட செலவுகள் எதுவும் இந்த வாரம் இருக்காது. குடும்ப ரீதியாகவோ அல்லது தொழில் சம்பந்தமாக முக்கிய முடிவுகள் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அவற்றை வாரத்தின் பிற்பகுதியில் எடுக்கலாம்.

சகோதரருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்தால் இப்போது சரியாகிவிடும். மாணவமணிகள் தாங்கள் சிரமப்படும் தருணத்தில் சக மாணவர்களிடம் உதவி கிடைப்பது மன ஆறுதலை அளிக்கும். பெண்களுக்கு அலுவலகத்தில் கடின உழைப்பு ஏற்படும்

பரிகாரம்: புதன் கிழமைகளில் சீனிவாசப் பெருமாளுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள் | அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வியாழன் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x