Published : 26 Apr 2024 05:43 AM
Last Updated : 26 Apr 2024 05:43 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் செய்ய, புது பதவி ஏற்க, குழந்தைக்கு பெயர் வைக்க, தங்க ஆபரணங்கள் வாங்க, தாலிக்கு பொன் உருக்க, பத்திரப் பதிவு செய்ய நல்ல நாள். ராகுகாலத்தில் மாரியம்மன் கோயில்களில் தீபம் ஏற்றினால் தடைகள் விலகும். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். சிவஸ்துதி, மகாலட்சுமி அஷ்டோத்திரம், அன்னபூர்ணாஷ்டகம், கனகதாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றை படித்து வந்தால் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

மேஷம்: நீங்கள் நல்லது சொல்லப் போய் சிலர் தவறாகப் புரிந்து கொள்வர். மனைவி, தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சலும், செலவுகளும் இருக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செயல்படுவது நல்லது.

ரிஷபம்: வீண் செலவுகளை கட்டுப்படுத்தி சேமிக்க முடிவு செய்வீர். அதிரடி திட்டங்களை தீட்டுவீர். பணவரவு திருப்தி தரும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பர். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார். அலுவலகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.

மிதுனம்: புதிய வாகனம், வீடு வாங்கத் திட்டமிடுவீர்கள். யாருடைய ஆலோசனையும் இன்றி அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த பணம் கிடைக்கும். நீண்ட நாள் சந்திக்காத பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்.

கடகம்: அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். ஈகோ பிரச்சினைக்கு பிறகு கணவன் - மனைவிக்குள் அனுசரித்து போவீர்கள். பழைய வாகனம் செலவு வைக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

சிம்மம்: பணப் பற்றாகுறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர். அவர்கள் படிப்பு தொடர்பாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர். வியாபாரத்தை விரிவுப்படுத்து வீர். அலுவலகத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி பிறக்கும்.

கன்னி: உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரும். வீண் குழப்பங்கள் நீங்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள். எதிலும் நிதானம் காப்பது நல்லது.

துலாம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர். வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற திட்டமிடுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடக்கவும்.

விருச்சிகம்: பழைய பிரச்சினைகள் தலை தூக்கும். வீண் பயம், கவலைகள் வரும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். மின்சார சாதனங்களை கவனமாக கையாள வேண்டும். மனைவி வழி உறவினர் வருகையால் வீடு களைகட்டும். புதிய பங்குதாரர் கிடைப்பார். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

தனுசு: அடிமனதில் இருந்த பயம் நீங்கி, துணிச்சலான சில முடிவுகளை எடுப்பீர்கள். குழப்பங்கள் தீர்ந்து தம்பதிக்குள் அனுசரித்து போவீர்கள். பிள்ளைகளின் சாதனை களால் பெருமையுண்டு. வியாபாரத்தில் புதிய பங்குதாரரின் உதவியால் லாபம் கிட்டும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

மகரம்: உங்களின் குறிக்கோளை எட்டிப் பிடிக்க முயற்சிப்பீர்கள். பணவரவு உண்டு. விருந்தினர் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். தந்தையின் உடல்நிலை சீராகும். அண்டை வீட்டாரின் ஆதரவு கிட்டும். நீங்கள் வேடிக்கையாக பேசப் போய் அது வினையாக முடியும். எச்சரிக்கையாக பேசவும்.

கும்பம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தந்தை வழியில் ஆதாயம் உண்டு. உங்களை தேடி வந்து சிலர் உதவி கேட்பர். முக்கிய பிரமுகர்கள், ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். நண்பர்களுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் புதிய பதவி கிடைக்கும்.

மீனம்: மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகை உண்டு. வீண் செலவுகள் குறையும். பூர்வீக சொத்து பிரச்சினை முடிவுக்கு வரும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x