Published : 19 Feb 2024 06:00 AM
Last Updated : 19 Feb 2024 06:00 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம் செய்ய, குழந்தைக்கு காது குத்த, வியாபாரம் தொடங்க, வீடு, மனை வாங்குவதற்கு முன்பணம் தர நல்ல நாள். சிவஸ்துதி படித்து, சிவபெருமானுக்கு பால், தயிர், பன்னீர் அபிஷேகம், தாமரை, அரளி மலர்கள், வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, எள் தீபம் ஏற்றினால் காரியத் தடைகள் நீங்கி நன்மை உண்டாகும். பச்சரிசி அல்லது நெல் தானம் செய்தால், நீண்ட நாள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும்.

மேஷம்: போட்டி, சவாலில் வெற்றி பெறுவீர்கள். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பிரபலங்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டு.

ரிஷபம்: உங்கள் மனம் விரும்பிய புதிய பாதையில் பயணிப்பீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். பண வரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள்.

மிதுனம்: தேவையற்ற அச்சம், மன சஞ்சலம் இருக்கும். அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கும். கணவன் -மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது. திடீர் பயணம் வரும்.

கடகம்: பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, முக்கிய முடிவு எடுப்பீர்கள். உங்கள் துணைவரின் சுவாசக் கோளாறு, சைனஸ் பிரச்சினை நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

சிம்மம்: குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வெளியில் சென்று வருவீர்கள். உடல்நிலை சீராகும். உறவினர்கள் வருகை உண்டு. கனவுத் தொல்லை, தூக்கமின்மை விலகும். பணிச் சுமை குறையும்.

கன்னி: இடையூறுகள், தடைகளை கடந்து, குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் அடிமனதில் இருப்பதை அறிவீர்கள்.

துலாம்: வெளி வட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். அதனால் ஆதாயமும் உண்டாகும். தள்ளிப்போன வழக்கில் சாதகமான திருப்பம் வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

விருச்சிகம்: சின்னச் சின்ன கவலைகள் வந்துபோகும். நீங்கள் ஒன்று பேச, மற்றவர்கள் வேறுவிதமாக புரிந்துகொள்வார்கள். பேச்சில் பொறுமை தேவை. ஆன்மிகம், யோகாவில் ஈடுபாடு கூடும்.

தனுசு: இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வீடு, வாகன பழுதை சரிசெய்வீர்கள்.

மகரம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என விரும்புவீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

கும்பம்: குடும்பத்தினரின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும். வாகன பழுது நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். எதிலும் நிதானம் தேவை.

மீனம்: விலகிச் சென்ற உறவினர்கள், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பணி, தொழில் சம்பந்தமாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். ஆன்மிக நாட்டம் கூடும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x