Published : 28 Jul 2023 05:35 AM
Last Updated : 28 Jul 2023 05:35 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அலைச்சலும், செலவுகளும் இருக்கும். நீங்கள் நல்லது சொல்லப் போய் சிலர் தவறாக புரிந்து கொள்வார்கள். உடல் நலத்திலும் கவனம் தேவை. பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர்கள்.

ரிஷபம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர். அழகு, இளமை கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பணவரவு உண்டு.

மிதுனம்: வேற்று மொழி, மதத்தினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல் நாட்டுப் பயணம், சுற்றுலா சாதகமாக அமையும். பழைய கடன்கள் ஒவ்வொன்றாகத் தீர வழி கிடைக்கும்.

கடகம்: பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். ஆன்மிகம், யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். மனத்தில் இருந்த வீண் பயம், குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.

சிம்மம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள்.

கன்னி: விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மன இறுக்கம் நீங்கும். முக்கிய பிரமுகர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். இழுபறி வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிள்ளைகளின் படிப்பில் அதிக கவனம் தேவை.

துலாம்: தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் உங்களைத் தேடி வந்து பேசுவார்கள். யாரிடமும் பகைமை பாராட்ட வேண்டாம்.

விருச்சிகம்: மறைமுக அவமானம் ஏற்படக் கூடும். கோயில் முக்கிய நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர். பழைய கடன் சுமையை நினைத்து அவ்வப்போது நிம்மதி இழப்பீர்கள். மன அமைதிக்கு தியானம் செய்யவும்.

தனுசு: திடீர் பயணங்கள், ஆழ்ந்த உறக்கமின்மை வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வந்து நீங்கும். யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம்.

மகரம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அக்கம் - பக்கத்தினருடன் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்.

கும்பம்: உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். புதிய பதவி தேடி வரும்.

மீனம்: நினைத்த காரியம் நிறைவேறும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிறர் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கவும். பணவரவு திருப்தி தரும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x