Published : 03 Jun 2023 05:30 AM
Last Updated : 03 Jun 2023 05:30 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அலைச்சலும், எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். நீங்கள் நல்லது சொல்லப்போய் சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

ரிஷபம்: எத்தனை தடைகள் வந்தாலும் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அழகு, இளமை கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும்.

மிதுனம்: வேற்றுமொழி, மதத்தினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

கடகம்: பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வெளியூர் பயணம் மகிழ்ச்சியைத் தரும்.

சிம்மம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பணப்
பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயார் ஆதரவாக இருப்பார்.

கன்னி: விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மனஇறுக்கம் நீங்கும். விஐபிகள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.

துலாம்: தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். விலகியிருந்த உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்: மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். கோயில் முக்கிய நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கடனை நினைத்து அவ்வப்போது நிம்மதியிழப்பீர்கள். வெளியூர் பயணம் உண்டு.

தனுசு: ஆழ்ந்த உறக்கமின்மை வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வந்து நீங்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.

மகரம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் கைகூடி வரும். முக்கிய பதவிக்கு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

கும்பம்: மனைவிவழி உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும்.

மீனம்: நினைத்த காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். விருந்தினர், நண்பர்கள் வருகையால் வீடு கலகலப்பாகும். கலைப்பொருட்கள் சேரும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x