எஸ்.கோவிந்தராஜ்
கோவையைப் பூர்விகமாகக் கொண்டவர். 1994-ம் ஆண்டு, கோவையில் நாளிதழ் நிருபராகப் பணியில் சேர்ந்து, வார இதழ் மற்றும் நாளிதழ்களில் செய்தியாளர், மூத்த செய்தியாளர், உதவி ஆசிரியர், இணைப்பிதழ் ஆசிரியர் என செய்திப் பிரிவில் பல்வேறு நிலைகளில், சென்னை மற்றும் ஈரோடு, கோவை உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்துள்ளார்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் தொடக்க நாள் முதல் செய்தியாளராகப் பணிபுரிந்து வரும் இவர், ஈரோடு வீட்டு வசதி வாரிய முறைகேடு உள்ளிட்ட பல்வேறு சிறப்புச் செய்திகளை வழங்கியுள்ளார். பல்வேறு முன்னணி அரசியல் தலைவர்களிடம் இவர் எடுத்த நேர்காணல்கள், அரசியல் கட்டுரைகள் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியாகி உள்ளன.