விளையாட்டு

ஐபிஎல்: கொல்கத்தா அணியில் முசரபானி

செய்திப்பிரிவு

கொல்கத்தா: ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனையொட்டி கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஜிம்​பாப்வே அணியை சேர்ந்த வேகப்​பந்து வீச்​சாள​ரான பிளெசிங் முசரபானியை ஒப்​பந்​தம் செய்​துள்​ளது. ஐபிஎல் வாய்ப்​பைப் பயன்​படுத்​திக் கொள்​ளும் வகை​யில், முசர​பானி பாகிஸ்​தான் சூப்​பர் லீக் ஒப்​பந்​தத்​தைக் கைவிட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

சமீபத்​தில் முடிவடைந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் முசர​பானி சிறந்த செயல் திறனை வெளிப்​படுத்​தி​யிருந்​தார். இந்​தத் தொடரில் அவர், 13 விக்​கெட்​டு​களை வீழ்த்​தி​யிருந்​தார். 6 அடி 8 அங்​குல உயரம் கொண்ட முசர​பானி, 2017-ம் ஆண்டு அறி​முக​மானது முதல் ஜிம்​பாப்வே அணிக்​காக அனைத்து வகையி​லான கிரிக்​கெட் போட்​டிகளி​லும் விளை​யாடி வரு​கிறார்.

          

89 சர்​வ​தேச டி20 போட்​டிகளில் விளை​யாடி​யுள்ள முசர​பானி, 106 விக்​கெட்​டு​களைக் கைப்​பற்​றி​யுள்​ளார். ஓவருக்கு சராசரி​யாக 7.24 ரன்​களை மட்​டுமே விட்​டுக்​கொடுத்​துளளார். முசரபானி தனது வேகப்​பந்து வீச்​சுத் திறமையை உலகம் முழு​வதும் உள்ள டி 20 தொடர்​களான சிபிஎல், ஐஎல்​டி20, பிஎஸ்​எல், இங்​கிலாந்​தின் விட்டா​லிட்டி பிளாஸ்ட் ஆகிய​வற்​றின் மூலம் நிரூபித்​துள்​ளார்.

முசர​பானி ஐபிஎல் அணி​யுடன் இணைவது இது 2-வது முறை​யாகும். கடந்த 2025-ம் ஆண்டு சீசனின் இறுதி கட்​டத்​தில், ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணி​யில் தற்​காலிக மாற்று வீர​ராக இடம் பெற்​றிருந்​தார். நடப்பு ஐபிஎல் தொடரில் விளை​யாடு​வதற்​காக முசர​பானி வரும் 17-ம் தேதி கொல்​கத்தா அணி​யுடன் இணைய உள்​ளார்.

SCROLL FOR NEXT