தமிழ் சினிமா

விஜய்க்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி

செய்திப்பிரிவு

'மாஸ்டர்' படப்பிடிப்புத் தளத்தில் விஜய்க்கு வழக்கமான தன் அன்பு முத்தத்தைக் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி.

கூகுள் புகைப்படங்களில் ரசிகர்களுடன் விஜய் சேதுபதி இருக்கும் படங்களைப் பார்த்தால், அதில் அனைவருக்கும் முத்தம் கொடுத்திருப்பார். ரசிகர்களுக்கு முதலில் அன்பாக முத்தம் கொடுக்கவே, அடுத்ததாக வருபவர்களும் அதைப் பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள். இந்தப் பட்டியலில் இப்போது விஜய்யும் இணைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'மாஸ்டர்' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்புத் தளத்தில் கலை இயக்குநர் சதீஷ் குமாரின் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளது படக்குழு. அப்போது சதீஷ் குமாருக்கு அன்பாக முத்தம் ஒன்றைக் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி.

இதனைக் கவனித்த விஜய், தனக்கு முத்தம் கொடுக்குமாறு கிண்டலாகக் கேட்டுள்ளார். உடனே விஜய்யைக் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. இந்த நிகழ்வின்போது ஒட்டுமொத்தப் படக்குழுவினருமே கை தட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.

சமீபத்தில் ரசிகர்களுடன் விஜய் எடுத்த செஃல்பி இணையத்தில் பெரும் வைரலானது. அதைப் போலவே விஜய் சேதுபதி விஜய்க்கு முத்தம் கொடுத்த புகைப்படமும், வீடியோவும் விரைவில் வைரலாகும் என்பதில் சந்தேகமில்லை.

தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT