ஷனம் ஷெட்டியை பிரிந்தது ஏன்? - இன்ஸ்டாகிராம் பதிவில் தர்ஷன் வெளிப்படை

ஷனம் ஷெட்டியை பிரிந்தது ஏன்? - இன்ஸ்டாகிராம் பதிவில் தர்ஷன் வெளிப்படை
Updated on
2 min read

ஷனம் ஷெட்டியை பிரிந்தது ஏன் என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தர்ஷன் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் தர்ஷன் செல்லும் முன்பே, ஷனம் ஷெட்டியை காதலித்து வந்தார். தர்ஷன் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றவுடன், ஷனம் ஷெட்டி தனது சமூகவலைதளப் பதிவுகளில் தர்ஷனை காதலிப்பதை உறுதிப்படுத்தினார். பிக் பாஸ் வீட்டிலிருந்து தர்ஷன் வெளியே வந்தவுடன் இருவருக்கும் மோதல் உண்டானது.

இதனைத் தொடர்ந்து ஷனம் ஷெட்டி, தர்ஷன் மீது காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். அதற்கு பதிலடியாக பத்திரிகையாளர்களைச் சந்தித்து தன் நிலையை விளக்கினார் தர்ஷன். இந்தப் பிரச்சினைக்குப் பிறகு நீண்ட நாட்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தினை உபயோகிக்காமல் இருந்தார் தர்ஷன்.

தற்போது தனது காதல் பிரிவு குறித்து முதன் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் தர்ஷன். அதில் அவர், "சில உறவுகள் தோல்வியடையும். அதற்கு என்ன காரணமாக இருந்தாலும் அது இரண்டு பேருக்கு நடுவில் இருக்கும் விஷயம். ஒருவரோ அல்லது இருவருமே மகிழ்ச்சியாக இல்லை என்றால் விஷயங்கள் இன்னும் சிக்கலாவதற்குள் சுமுகமாகப் பிரிவதுதான் சரியான முடிவாக இருக்கும்.

மகிழ்ச்சியில்லாத உறவில் என்ன காரணத்துக்காக இருந்தாலும் அது சரியல்ல. நான் இந்த நபரின் மீது பெரும் மரியாதை வைத்திருந்தேன். ஆனால் எங்களுக்கிடையே விஷயங்கள் ஆரோக்கியமாக இல்லை, அவர்களால் அந்த யதார்த்தத்தை ஏற்க முடியாமல் என்னை வேண்டுமென்றே ஒழித்துக் கட்ட முனைந்துள்ளார். எந்த குற்றச்சாட்டிலும் உண்மையில்லை. உண்மை தெரியாதவர்களும், ஊடகங்களும் எனது குணத்தை விசாரிக்கின்றனர்.

இதனால் நான் காயப்பட்டேன். இந்த காரணத்தால் தான் சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருந்தேன். வாழ்க்கையில் பின்னடைவுகள் இருக்கும். ஆனால் அதிலிருந்து நான் கற்றிருக்கிறேன். எனது எதிர்காலத்தின் மீதும், தொழில் வாழ்க்கை மீதும் முன்னை விட அதிக கவனம் செலுத்தி வருகிறேன். என்ன நடந்தாலும் என் பக்கம் நின்ற அனைவருக்கும் மிக்க நன்றி. அவர்களுக்கு நான் என்றும் கடன் பட்டிருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் தர்ஷன்.

தவறவிடாதீர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in