தென்னிந்திய சினிமா

‘சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ - அவதூறு ஆடியோ குறித்து ராஷ்மிகா எச்சரிக்கை

ப்ரியா

நடிகை ராஷ்மிகா மந்​தனா - விஜய் தேவர​கொண்டா திருமணம் ராஜஸ்​தான் மாநிலம் உதய்​பூரில் பிப்.26-ல் நடை​பெற்​றது. திருமண வரவேற்பு நிகழ்வு ஹைதராபாத்தில் பிர​ம்மாண்​ட​மாக நடை​பெற்​றது.

ராஷ்மிகா மந்​த​னா​வுக்​கும், கன்னட நடிகர் ரக் ஷித் ஷெட்​டிக்​கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமண நிச்​சய​தார்த்​தம் நடை​பெற்று பின்பு அது நின்​றது. அந்த நேரத்​தில் ராஷ்மி​கா​வின் தாயார் பேசிய ஆடியோ, இப்​போது சமூக வலை​தளங்​களில் பரவியது. இந்த ஆடியோ வைரலானதை அடுத்து ராஷ்மிகா காட்​ட​மாக அறிக்கை ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார்.

அதில் அவர், ‘‘என்​னைப் பற்றி தவறான தகவல்​களும் என் மீதான துன்​புறுத்​தல்​களும் தொடங்கி 8 ஆண்​டு​கள் ஆகின்​றன. நான் சொல்​லாத வார்த்​தைகளைத் தவறான கதைகளாக மாற்​றியதை​யும், வெறும் ‘வியூஸ்’ மற்​றும் சமூக வலைதள ஈடு​பாட்​டுக்​காக என் மீது வெறுப்​பைப் பரப்​பியதை​யும் அமை​தி​யாகப் பார்த்​துக் கொண்​டிருந்​தேன்.

          

பொது​வாழ்​வில் இருக்​கும்​போது சில நேரங்​களில் நியாயமற்ற விமர்​சனங்​கள் வரும் என்​பதை ஏற்​றுக்​கொண்​டேன். நான் எனக்கு உண்​மை​யாக இருக்​கும் வரை, மகிழ்ச்​சி​யைப் பரப்​பும் வரை எல்​லாம் சரி​யாகி​விடும் என்று நம்​பினேன். ஆனால், இப்​போது நடந்​தவை இனி புறக்​கணிக்க முடி​யாத எல்​லை​யைத் தாண்டி விட்​டன.

கிட்​டத்​தட்ட 8 ஆண்​டு​களுக்கு முன்பு நடந்​த​தாக நம்​பப்​படும் பழைய, தனிப்​பட்ட உரை​யாடல்​களைச் சம்​பந்​தப்​பட்​ட​வர்​களின் ஒப்​புதல் இல்​லாமல் பரப்பி வரு​கிறார்​கள். அந்த உரை​யாடலில் சிறிய பகுதி வேண்​டு மென்றே நீக்​கப்​பட்​டு, சர்ச்​சையை உரு​வாக்​கி​யுள்​ளார்​கள். என்​னுடைய தனிப்​பட்ட வாழ்க்​கை​யில் அண்​மை​யில் நடந்த சம்​பவத்தை நோக்​க​மாகக் கொண்டு இவை பரப்​பப்​படு​கிறது.

என் குடும்​பத்​தினரை​யும், நலம் விரும்​பிகளை​யும், நண்​பர்​களை​யும், இந்த விஷ​யத்​தில் தொடர்பு இல்​லாதவர்​களை​யும், அசவு​கரி​யத்​தில் ஆழ்த்​தி​யுள்​ளனர். இது முழுவதும் ஒரு​வரின் தனி​யுரிமை மீதான தாக்​குதல். தவறான தகவல்​களை​யும், அவதூறான தகவல்​களை​யும் பரப்பி வரு​கிறார்​கள். இந்த ஆடியோவை பகிரும் அனைத்து ஊடக தளங்​கள் மற்​றும் தனி​நபர்​கள் உடனடி​யாக அவற்றை 24 மணிநேரத்​துக்​குள் நீக்க வேண்​டும். இல்​லை​யென்​றால் சட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்று கூறி​யுள்​ளார்.

SCROLL FOR NEXT