பாலிவுட்

குத்​துப் பாடல்​ வரி​கள்: ஷபானா ஆஸ்மி வருத்தம்

ப்ரியா

குத்​துப்​பாடல்​களில் வரும் சில வரி​கள் சங்​கடத்தை ஏற்படுத்​து​வ​தாகப் பிரபல பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி தெரி​வித்​துள்​ளார். இதுபற்றி அவர் கூறிய​தாவது: சினிமா என்​பது பிம்​பங்​களால் வரையறுக்​கப்படு​கிறது.

எனவே, ஒரு பெண்​ணின் உடலை ஒவ்​வொரு பகு​தி​யாகக் காட்​டும்​போது,கேமரா அந்த உடலைச் சுற்றி எப்​படி நகர்​கிறது என்​பதை வைத்தே இயக்​குநரின் நோக்​கம் என்ன என்​பது முடி​வாகிறது. குத்​துப்​பாடலில் வரும் நாயகி, தன் மீதான அனைத்து கட்​டுப்​பாட்​டை​யும் இழந்​து, ‘ஆணின் பார்​வைக்​கு’ தன்னை ஒப்​புக்​கொடுப்​பது​போல நான் உணர்​கிறேன்.

          

பெரும்​பாலான பாடல்​களில் அப்​படித்​தான் இருக்​கிறது. அங்கே அவள் ஒரு பொருளாக மாறிக்​கொள்​கிறாள். அப்​பாடல்​களில் வரும் சில வரி​கள் எனக்கு மிகுந்த சங்​கடத்தை ஏற்​படுத்​துகின்​றன. ‘ஆண்​கள் இதைச் செய்​யும்​போது பெண்​கள் ஏன் செய்​யக்​கூ​டாது?’ என்று பல பெண்​கள் கேட்​கிறார்​கள். ஆனால், ஆண்​கள் தங்​களைப் பொருளாகக் காட்​டிக்​கொள்​ளத் தயா​ராக இருக்​கிறார்​கள் என்​ப​தற்​காக, நீங்​களும் ஏன் அதற்​குச் சம்​ம​திக்க வேண்​டும்? என்​ப​தில் எனக்கு உடன்​பாடில்​லை.

பெரும்​பாலும் குத்​துப்​பாடல்​களுக்​கும் கதைக்​கும் எந்​தச் சம்​பந்​த​மும் இருப்​ப​தில்​லை. அது தனித்த விஷய​மாகவே இருக்​கிறது. அப்​பாடல்​களுக்​கான சமூகத்​தின் எதிர்​வினை​யும் எனக்​குக் கவலை​யளிக்​கிறது. திருமண விழாக்​களுக்​குச் சென்​றால், அங்கே சிறு குழந்​தைகள் ‘சோலி கே பீச்சே க்யா ஹை’ போன்ற பாடல்​களைப் பாடி ஆடு​கிறார்​கள். அங்​கிருப்​பவர்​கள் அதைப் பார்த்து சிரிக்​கிறார்​கள். யாரும் அந்த வரி​களைக் கவனிப்​ப​தில்​லை. இவ்​வாறு ஷபானா ஆஸ்மி தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT