அஜித் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'வேதாளம்' திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.
2015-ம் ஆண்டு ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான படம் 'வேதாளம்'. அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன், ராகுல் தேவ், கபீர் சிங், சூரி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. அஜித் நடித்த கதாபாத்திரத்தில் ஜான் ஆபிரஹாம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றிய பூஷண் குமார் தயாரிக்கவுள்ளார்.
ரோஹித் தவண் இயக்கவுள்ள இந்தப் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்திக்கு ஏற்றவாறு கதைக்களத்தை மாற்றி வருகிறது படக்குழு. லட்சுமி மேனன் மற்றும் ஸ்ருதி ஹாசன் கதாபாத்திரங்களில் நடிக்க நடிகைகள் தேர்வும் நடைபெற்று வருகிறது.
இந்தி ஏற்றவாறு மாற்றங்கள் முடிந்து, நடிகர்கள் தேர்வு முடிந்தவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. முன்னதாக தென்னிந்தியப் படங்களான 'வீரம்', 'ஜெர்சி', 'தடம்' ஆகிய படங்கள் இந்தியில் ரீமேக்காகி வருவது நினைவு கூரத்தக்கது.
தவறவிடாதீர்