சிறப்பு பலன்கள்

மேஷம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026

02.06.2026 முதல் 26.06.2027 வரை

முனைவர் கே.பி.வித்யாதரன்

புறம் சொல்லாத குணமும் பொறாமை இல்லாத மனமும் கொண்ட மேஷ ராசிக்காரர்களே!

குருபகவான், ஜூன் 2 முதல் உங்கள் ராசிக்கு, 4-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப் போகிறார். இதுவரை 3-ம் வீட்டில் அமர்ந்து பல தடைகளையும், காரியங்களை முடக்கி வைத்திருந்த குருபகவான், இப்போது நான்காம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால், தன்னம்பிக்கை துளிர்விடும். புது எண்ணங்களும் மனதில் தோன்றும். சவாலான சில விஷயங்களை போராடி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். என்றாலும் கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதம் வந்து போகும். தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங் கள். அவருக்கு சிறு சிறு அறுவை சிகிச்சை செய்வார்கள். நீர், நெருப்பு, மின்சாரம் இவற்றை கவனமாக கையாளுங்கள்.கையிருப்பு கரையக் கூடும். சொந்த பந்தங் களிடம் விட்டுக் கொடுத்துப் போகவும்.

பூர்வீக சொத்துப் பிரச்சினையை நல்ல வழக்கறிஞரை வைத்து வாதாடுங்கள். சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு நிறைவேறும் என்றாலும் வீடு மனை வாங்கு வதற்கு முன்பு தாய் பத்திரத்தை முழுமையாக சரிபார்த்து வாங்குவது நல்லது. யாரும் உங்களை பாராட்ட வேண்டு மென நினைக்காதீர்கள். இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

குரு பகவானின் பார்வை பலன்கள்:

குரு பகவான் 8-ம் இடத்தைப் பார்ப்பதால், பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அதன் மூலம் ஆதாயமும் கிடைக்கும். குருபகவான் 10-ம் இடத்தைப் பார்ப்பதால், அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் கிடைக்கும். சிலருக்கு வேறு நிறுவனங்களிலிருந்தும் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

12-ம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால், எதிர்பாராத பணவரவு உண்டு. எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறு வீர்கள். சுபச் செலவுகள் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். யோகா, தியானம் செய்யுங்கள். வீண் விமர்சனங்களை முடிந்தவரையில் தவிர்த்து விடுங்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்களின் பாக்யாதிபதியான குருபகவான் தனது நட்சத்திரத்தில் 02.06.26 முதல் 18.06.26 வரை பயணம் செய்வதால் பேச்சில் கம்பீரம் பிறக்கும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டு. சகோ தர வகையில் உதவிகள் கிடைக்கும். பாதகாதிபதியான சனிபகவானின் நட்சத்திரத்தில் 18.06.26 முதல் 19.08.26 வரை குரு பகவான் பயணம் செய்வ தால் எடுத்த வேலைகளில் வெற்றி உண்டு. எனினும் அவ்வப்போது வீண் அலைச்சலும், விரயச் செலவுகள் வரும்.

தைரியம் மற்றும் அலைச்சல் தரும் புதனின் நட்சத்திரத்தில் 19.08.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 26.06.27 வரை குருபகவான் பயணம் செய்வதால் குழந்தையில்லாத தம்ப திக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். விலையுயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். பணப் பற்றாக் குறை நிலை ஏற்படும். நண்பர்கள், உற வினர்களுடன் மனஸ்தாபம் வரலாம்.

கேதுவின் நட்சத்திரத்தில் 31.10.26 முதல் 25.01.27 வரை குருபகவான் செல்வதால் உங்களுக்கு எல்லா வகையிலும் வெற்றி உண்டு. பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். அசுவினி நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல், சோர்வு, காரியத்தடைகள் ஏற்படும். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதுவேலையில் அமர்வீர்கள்.

வியாபாரத்தில் புதிய வாடிக்கை யாளர்கள் அதிகரிப்பார்கள். நவீன விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். சிலர் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். ஹோட்டல், கெமிக்கல், கமிஷன் வகைகளால் லாபமுண்டு. அனுபவ மிகுந்த வேலையாட்களை பணியில் அமர்த்த போராடுவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களுக்கு எதிராக நடந்து கொள்வார்கள்.

உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கள் அதிகரிக்கும். மேலதிகாரியுடன் வீண் விவாதங்கள் வேண்டாம். சக ஊழி யர்கள் சாதகமாக இருக்கிறார்கள் என நினைக்காதீர்கள். உங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வைப்பார்கள். எனினும் உங்களுக்குச் சாதகமான நிலையே உருவாகும். திடீர் இடமாற்றம் உண்டு. கணினித் துறையினருக்கு வேறு நல்ல வாய்ப்புகள் அமையும். கலைத்துறையினருக்கு மூத்த கலைஞர் களின் ஆதரவு கிடைக்கும். வதந்திகளில் சிக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஆக மொத்தம் இந்த குருப் பெயர்ச்சி தடைகளை உடைத்து வெற்றி பெறும் காலமாக அமையும்.

குரு பகவான் பரிகார தலங்கள்:

காஞ்சிபுரத்திலிருந்து திருத்தணி செல்லும் வழியில் (அரக்கோணம் அருகில்) 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கோவிந்தவாடி. இங்குள்ள கைலாசநாதர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். தந்தையை இழந்த பிள்ளைகளின் படிப்புச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். தடைகள் நீங்கி வெற்றிகள் கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT