ரோஹிங்கியாக்கள் மீதான வன்முறை வருத்தமளிக்கிறது: மவுனம் கலைத்த அமெரிக்கா

By பிடிஐ

மியான்மரில் நடக்கும் நெருக்கடிகள் குறித்து அமெரிக்கா வருத்தம்தெரிவித்துள்ளது.

மியான்மரில் புத்த மதத்தினருக்கும், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த மாத (ஆகஸ்ட்) இறுதியில் கலவரம் ஏற்பட்டது. இதில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு ராக்கைன் மாகாண பகுதிகளில் பல்வேறு கிராமங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இதில் பலர் கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இதுவரை 87 ஆயிரம் பேர் மியான்மரிலிருந்து வங்கதேசத்துக்கு இடப்பெயர்ந்துள்ளதாக ஐ. நா. கூறியிருந்தது.

மியான்மரில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் குறித்து அமெரிக்கா தொடர்ந்து மவுனம் காத்துவருவதாக உலக நாடுகளின் தலைவர்கள்  கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில் அமெரிக்கா மியான்மரில் நிலவும் நெருக்கடிகள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து ஐநாவுக்கான அமெரிக்கா தூதர் நிக்கி ஹாலே கூறும்போது, "மியான்மரில் ராக்கைன் மாகாணத்தில் நிகழும் வன்முறைகள் கண்டு அமெரிக்கா மிகுந்த வருத்தத்தில் உள்ளது. கடந்த இரு வாரங்களில் மட்டும் மியான்மரிலிருந்து சுமார் 2,70,000 மக்கள் வங்கதேசத்துக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

வன்முறை ஏற்பட்ட இடங்களில் மியான்மர் அரசு மேற்கொள்ளும் மனிதாபிமான நடவடிக்கைகளை அமெரிக்கா வரவேற்கிறது. 

மேலும் உதவி தேவைப்படும் மக்களுக்கு விரைவில் உதவி செய்ய மியான்மர் அரசை கேட்டுக் கொள்கிறது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 mins ago

தமிழகம்

1 min ago

இந்தியா

20 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

51 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்