இலங்கையில் மே 12 முதல் 18-ம் தேதி வரை தமிழின படுகொலை வாரம்

By செய்திப்பிரிவு

இலங்கையில் கடந்த 2009-ல் நடைபெற்ற இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரின்போது முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த படுகொலையை நினைவுகூரும் வகையில் தமிழர் அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் தமிழின படுகொலை வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழர் வசிக்கும் பகுதிகளில் வரும் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தமிழின படுகொலை வாரம் அனுசரிக்கப்பட உள்ளது. மே 18-ம் தேதி முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நிகழ்ச்சியில் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்க உள்ளார்.

இதனிடையே இலங்கை உள்நாட்டுப் போரின்போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் நடத்தி வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று 75-வது நாளாக நீடித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

வாழ்வியல்

15 mins ago

தமிழகம்

31 mins ago

கருத்துப் பேழை

53 mins ago

விளையாட்டு

57 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்