மோசூலில் முன்னேறுகிறது இராக் அரசு படை: ஐ.எஸ். இயக்க தலைவர் தப்பி ஓட்டம்

By செய்திப்பிரிவு

இராக்கின் மோசூல் நகரில் அரசுப் படைகளுக்கும் ஐ.எஸ். தீவிர வாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. அரசுப் படை 6 முக்கிய பகுதி களைக் கைப்பற்றி முன்னேறி வருகிறது.

இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதி களின் கட்டுப்பாட்டில் உள்ள மோசூல் நகரை 2014 ஆகஸ்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி னர். அந்த நகரை மீட்க அரசுப் படைகள் ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிரமாகப் போரிட்டு வருகிறது. நேற்று முன்தினம் நகரின் கிழக்குப் பகுதி வழியாக அரசு படைகள் நகருக்குள் நுழைந்தன.

நகரின் 6 முக்கிய பகுதிகள் அரசு கட்டுப்பாட்டின் கீழ் வந்துள் ளது. அப்பகுதியின் உயரமான கட்டிடங்களில் அரசு கொடி பறக்க விடப்பட்டுள்ளது. அரசுப் படை களுக்கும் ஐ.எஸ். தீவிரவாதி களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி மோசூல் நகரில் முகாமிட்டிருந்த தாகக் கூறப்படுகிறது. அவரது ஆடியோ உரை நேற்று முன்தினம் வெளியானது. அதில் மோசூலில் இருந்து பின்வாங்கமாட்டோம், உயிருள்ளவரை போரிடுவோம் என்று சூளுரைத்தார்.

இந்நிலையில் மோசூல் நகரில் இருந்து அவர் தப்பியோடிவிட்ட தாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:

ஐ.எஸ். வீரர்கள் சாகும்வரை போரிட வேண்டும் என்று கூறிய பாக்தாதி மோசூலில் இருந்து தப்பியோடிவிட்டதாக உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித் துள்ளன. அப்பகுதி எண்ணெய் கிணறுகளுக்குத் தீவிரவாதிகள் தீ வைத்துள்ளனர். மோசூல் விரைவில் மீட்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

17 mins ago

க்ரைம்

21 mins ago

இந்தியா

19 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்