சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களை விற்கும் ஐஎஸ்

By செய்திப்பிரிவு

ஐஎஸ் தீவிரவாதிகள் போரில் சிறை பிடித்த பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்து வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சிரியா, இராக்கில் பெரும் பகுதியை ஐஎஸ் தீவிரவாத அமைப்பு கைப்பற்றி ஆட்சி நடத்தி வருகிறது. அந்த நாடுகளில் வாழும் சிறுபான்மையினரான குர்து, யாஸிதி இன மக்களை ஐஎஸ் தீவிரவாதிகள் சிறைப்பிடித்து செல் கின்றனர். அவர்களில் ஆண்களை கொலை செய்துவிட்டு பெண்களை பாலியல் அடிமைகளாக பயன் ப டுத்தி வருகின்றனர். அங்கிருந்து தப்பிய சில பெண்கள், ஐ.நா. சபையில் தங்களுக்கு இழைக்கப் பட்ட கொடுமைகளை ஏற்கெனவே விவரித்துள்ளனர்.

அமெரிக்க கூட்டுப் படை மற்றும் சிரியா-ரஷ்ய கூட்டுப் படை களின் தாக்குதல்களால் ஐஎஸ் அமைப்புக்கு தற்போது பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சிரியா, இராக்கில் இருந்து துருக்கி வழியாக கச்சா எண் ணெயை அந்த அமைப்பு கடத்தி வந்தது. அமெரிக்க கூட்டுப் படை களின் கண்காணிப்பால் அண்மை காலமாக அவர்களால் கச்சா எண் ணெயை கடத்த முடி யவில்லை. இதனால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு சமூக வலைத் தளங்கள் மூலம் பெண்களை விற்பனை செய்ய தொடங்கியுள் ளனர்.

கடந்த 20-ம் தேதி சமூக வலைத் தளம் ஒன்றில் வெளியிடப்பட்ட பதிவில், இளம்பெண் ஒருவர் விற்பனைக்கு இருப்பதாக அபு ஆசாத் அல்மானி என்ற ஐஎஸ் தீவிரவாதி அறிவித்தார்.

புகைப்படத்தில் இருக்கும் பெண் அடிமையின் விலை ரூ.5 லட்சம். விருப்பமுள்ளவர்கள் வாங் கலாம் என்று அந்த பதிவில் குறிப் பிடப்பட்டிந்தது. சில மணி நேரம் கழித்து அதேநபர் இன்னொரு பெண்ணின் புகைப்படத்தையும் வெளியிட்டு அவரும் விற்பனைக் கு இருப்பதாக பதிவிட்டிருந்தார். சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளம் தீவிரவாதியின் பக்கத்தை முடக்கி அந்தப் புகைப்படங்களை நீக்கியது.

இதர வழிகளிலும் பெண்களை பாலியல் அடிமைகளாக விற்பனை செய்யும் அவலம் தொடர்கிறது என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள் ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

29 mins ago

கருத்துப் பேழை

50 mins ago

தமிழகம்

48 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்