தைவான் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு

By ஏபி

தைவான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 121 பேரை காணவில்லை. அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தைவானின் தெற்குப் பகுதியில் கடந்த சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.4 ஆக நிலநடுக்கத்தின் தாக்கம் பதிவானது. இதில் தைனான் உட்பட பல்வேறு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் அப்பளம் போல நொறுங்கின.

முதல் நாளில் 14 பேர் உயிரிழந்ததாக அரசு அறிவித்தது. அங்கு கட்டிட இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்திருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலத்த காயமடைந்த 90 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 121 பேரை காணவில்லை. அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தைனான் நகர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

21 mins ago

க்ரைம்

25 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்