கரோனா உருவானது எங்கே? விசாரணை அறிக்கையை சமர்பிக்க அமெரிக்க உளவு அமைப்புக்கு அதிபர் பைடன் உத்தரவு

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது குறித்த விசாரணை அறிக்கையை மூன்று மாதங்களில் அமெரிக்க உளவு அமைப்பு சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கரோனா வைரஸ் சீனாவிலிருந்து தோன்றியதா, விலங்குகளிடமிருந்து தோன்றியதா அல்லது ஆய்வகத்திலிருந்து தோன்றியதா என்பது குறித்த விசாரணை அறிக்கையை அடுத்த மூன்று மாதங்களில் (90 நாட்களில்) அமெரிக்க உளவு அமைப்பு சமர்பிக்க வேண்டும்” என்று என்று தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

முன்னதாக ”கரோனா வைரஸ் எவ்வாறு தோன்றியது என்பது குறித்து தெளிவான விளக்கங்கள் கிடைக்கவில்லை. கரோனா வைரஸ் இயற்கையாகவே உருவானதாகக் கூறப்படுவதை தன்னால் நம்பமுடியவில்லை. இதுகுறித்த திறந்த விசாரணை வேண்டும். உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து வெளிப்படையாக விசாரிக்க வேண்டும்” என்று அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகரான டாக்டர் ஆண்டனி ஃபாசி சில தினங்களுக்கு முன்பு கூறி இருந்தார்.

இந்த நிலையில் ஜோ பைடன் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இந்த நிலையில் அமெரிக்க அதிபரின் இந்த உத்தரவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.

கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் பரவியுள்ளது என்று அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தொடர்ந்து கூறிவந்தன. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் 10 பேர் அடங்கிய விஞ்ஞானிகள் குழு பிப்ரவரி மாதம் சீனாவுக்குச் சென்றது. இதன் முடிவில் கரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில்தான் உருவானது என்பதற்கான ஆதாரம் இல்லை என்று கூறியிருந்தது. இந்த நிலையில் ஆண்டனி ஃபாசி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

விளையாட்டு

32 mins ago

க்ரைம்

36 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்