சிரியா அகதிகள் முகாமில் தீ விபத்து: 3 பேர் பலி

By செய்திப்பிரிவு

சிரியாவில் அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்திம் மூன்று பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இதுகுறித்து சிரிய உள்ளூர் அதிகாரிகள் தரப்பில், “ சிரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள அல் ஹோல் அகதிகள் முகாமில் 2 குழந்தைகள், 1 பெண் என மூன்று பே பலியாகினர். 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

திருமணம் நிகழ்வின்போது அடுப்பு வெடித்ததில் இந்த விபத்து நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக சிரியாவில் அல் ஹோ ஹோல் முகாமில் வசிக்கும் அகதிகள் அடிப்படைதேவைகள் கிடைக்காமல் உள்ளனர் என்றும். அங்கு நடக்கும் வன்முறைகள் குழந்தைகள் வளர்வதற்கான இடம் அதுவல்ல என்பதை காட்டுக்கிறது என்றும் இம்மாத இறுதியில் ஐக்கிய நாடுகள் சபை செய்தி வெளியிட்டுள்ளது.

அல் ஹோல் முகாமில் உள்ள 31,000 குழந்தைகள் 12 வயதுக்குட்டப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது.

ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது.

இந்த நிலையில் சிரியாவில் இயங்கும் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

15 mins ago

க்ரைம்

19 mins ago

இந்தியா

17 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்