வங்கதேசத்தில் போர் குற்றவாளிகள் 2 பேருக்கு மரண தண்டனை: மீண்டும் உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

By ஐஏஎன்எஸ்

போர் குற்றவாளிகள் 2 பேரின் மரண தண்டனையை வங்கதேச உச்ச நீதிமன்றம் நேற்று மீண்டும் உறுதி செய்தது. இதையடுத்து, விரைவில் அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேசத்தில் கடந்த 1971ம் ஆண்டு நடந்த போரின் போது, அவாமி லீக் ஆதரவாளர்கள் மற்றும் இந்துக்களை சித்ரவதை செய்து கொலை செய்ததாக வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமிய கட்சியின் பொதுச் செயலாளர் அலி அஹ்சன் முகமது முஜாஹித் மற்றும் வங்கதேச தேசியவாத கட்சித் தலைவர் சலாவுதின் காதர் சவுத்ரி மீது வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த போர் குற்றங்களுக்கான சிறப்பு நீதி மன்றம் கடந்த 2013, அக்டோபர் 1-ம் தேதி மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் இருவரும் மேல்முறையீடு செய்தனர். ஆனால், உச்ச நீதிமன்றமும், தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உறுதி செய்து கடந்த ஜூன், 16ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்நிலையில் கடைசி முயற்சியாக முஜாஹித்தும், சவுத்ரியும் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.சின்ஹா தலைமையிலான அமர்வு முன் கடந்த செவ்வாய் அன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் தீர விசாரித்த தலைமை நீதிபதி இவ்வழக்கில் ஏற்கனவே அளித்த தீர்ப்பை மீண்டும் உறுதி செய்வதாக நேற்று தீர்ப்பளித்தார்.

இதையடுத்து, தண்டனை நிறை வேற்றுவதற்கு முட்டுக்கட்டை யாக இருந்த சட்ட சிக்கல்கள் அனைத்தும் முற்றிலும் களையப் பட்டுவிட்டதாக அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் மஹ்பூபே ஆலம் தெரிவித்துள் ளார். இதனால் அவர்கள் இருவருக் கும் எந்த நேரத்திலும் மரண தண்டனை நிறைவேற்றப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டரீதியான முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்திருப்பதால், அதிபருக்கு கருணை மனு அனுப்பி வைப்பதை தவிர, அவர்களுக்கு வேற வழி இல்லை என்றும் கூறப்படுகிறது..

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

36 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

40 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்