கரோனா தடுப்பு மருந்து போட்டுக் கொண்டார் கமலா ஹாரிஸ்

By செய்திப்பிரிவு

அமெரிக்க துணை அதிபராக தேந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் கரோனா தடுப்பு மருந்தை பெற்றுக் கொண்டார்.

வாஷிங்டனில் உள்ள மருத்துவ மையத்தில் கமலா ஹாரிஸுக்கு மாடர்னா கரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.

இதுகுறித்து கமலா ஹாரிஸ் கூறும்போது, “ மக்கள் பயம் கொள்ளாமல் கரோனா தடுப்பு மருந்தை பெற்று கொள்ள வேண்டும். அதனை நான் இதன் மூலம் நினைவுப்படுத்துகிறேன். இந்தத் தடுப்பு மருந்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும், உங்கள் சமூகத்தையும் பாதுகாக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

கமலா ஹாரிஸின் கணவரும் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. அமெரிக்காவில் 1.8 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

டிசம்பர் மாதம் 14ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர் கரோனா தடுப்பு மருந்து பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. மாடர்னா கரோனா தடுப்பு மருந்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மைக் பைன்ஸ், ஜோ பைடன் ஆகியோர் மக்களின் அச்சத்தைப் போக்க தாங்களாகவே முன்வந்து கரோனா தடுப்பு மருந்தைப் போட்டுக் கொண்டனர். இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொண்டனர்.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே அமெரிக்காவில் கரோனா பதிப்பு அதிகரித்து வருகிறது. கலிபோர்னியா மாகாணம் மற்றும் ரோடே தீவில் புதிய கரோனா தொற்றுகள் அதிகரித்துள்ளன.

எனவே, மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

6 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்