ஜெர்மனியில் ஒரே நாளில் 32,195 பேருக்கு கரோனா பாதிப்பு

By செய்திப்பிரிவு

ஜெர்மனியில் ஒரே நாளில் அதிகபட்சமாக 32,195 பேருக்கு கரோன தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.

இதுகுறித்து ஜெர்ம்னி ஊடகங்கள் தரப்பில், “ ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 32,195 பேருக்கு கரோன தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15,87,115 ஆக உள்ளது. மேலும் நேற்று மட்டும் கரோனாவுக்கு 802 பேர் பலியாகியுள்ளனர், கரோனாவுக்கு இதுவரை ஜெர்மனியில் 28,770 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் தெற்கு இங்கிலாந்தில் கரோனா வைரஸில் புதிய வகை வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து அந்நாட்டில் மீண்டும் ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பல்வேறு ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. அதில் ஜெர்மனியும் ஒன்று.

கரோனா பரவலின் தீவிரம் அதிகமாக உள்ளதால் அதனைக் கட்டுப்படுத்த ஜெர்மனி அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6.5 கோடிக்கும் அதிகமானனோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதுவும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனாவால் உலக நாடுகளை மீண்டும் பீதி தொற்றிக் கொண்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

45 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்