தீவிரவாதி குறித்து தகவல் தந்தால் ரூ.37 கோடி பரிசு; மும்பை தாக்குதலில் தொடர்புள்ளதாக அமெரிக்க அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மும்பையின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டு கடந்த 2012 நவம்பர் 11-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மும்பை தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி சாஜித் மிர்ருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. சதித் திட்டம் தீட்டியது, அதை செயல்படுத்தியது, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தது என்று அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மும்பை தாக்குதலில் 6 அமெரிக்கர்களும் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்காவின் இலியானிஸ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. இந்த வழக்கில் பாகிஸ்தான் தீவிரவாதி சாஜித் மிர் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2012-ம் ஆண்டில் அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்காவின் எப்பிஐ புலனாய்வு அமைப்பு அறிவித்தது.

இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி சாஜிர் மிர்ரை தீவிரமாக தேடி வருகிறோம். அவர் குறித்து அமெரிக்க அரசுக்கு தகவல் தெரிவித்தால் ரூ.37 கோடி பரிசு வழங்கப்படும். 1-202-702-7843 என்ற எண்ணில் வாட்ஸ் அப், சிக்னல் அல்லது டெலிகிராம் வாயிலாக தகவல்களை தெரிவிக்கலாம்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை புகைப்படத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

28 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்