அமெரிக்க - இந்தியச் சமூகத்துடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளேன்: ஜோ பிடன்

By செய்திப்பிரிவு

நான் எப்போதும் இந்திய- அமெரிக்கச் சமூகத்துடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளேன் என்று ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கூறும்போது, “நான் எப்போதும் இந்திய- அமெரிக்கர்களுடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளேன். ஏனெனில் குடும்பம், கடமை, சுய ஒழுக்கம், மரியாதை, பணிகள் ஆகியவற்றில் நாம் ஒற்றுமையாக உள்ளோம்.

மேலும், அமெரிக்க வளர்ச்சியில் அவர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர். ஜனநாயகக் கட்சி சார்பாக துணை அதிபராகப் போட்டியிடும் கமலா ஹாரிஸ் சிறந்தவர், அறிவாளி. அவர் தனது தாயால் ஈர்க்கப்பட்டுள்ளார். அவர் தாயை நினைத்துப் பெருமை கொள்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டதாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்து வருகிறார். தேர்தல் முடிவு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் மீதான தடையை நீக்குவேன் என்று ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

ஜோ பிடன் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் நாட்டைச் சரியாக வழிநடத்த மாட்டார் என்று ட்ரம்ப் விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், மற்றும் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் ஒபாமா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

4 mins ago

சினிமா

16 mins ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

50 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்