கரோனா அதிகரித்து வருவது மிகப்பெரிய சிக்கல்: பிரிட்டன்

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று அதிகரித்து வருவது மிகப்பெரிய சிக்கல் என்று பிரிட்டன் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மாட் ஹன்காக் கூறும்போது, “ நாம் கரோனா தொற்று அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். மருத்துவமனையில் சேர்க்கை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது சவாலானது. நம் கையில் மிகப்பெரிய சிக்கல் உள்ளது.

இரண்டாவது கரோனா அலையை எவ்வாறு சமாளிக்கிறோம் என்பது சவாலானது. எனினும், நாம் முதல் கரோனா பரவலைக் கையாண்ட விதம் நமக்கு உதவும்” என்று தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸைத் தடுக்கும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தோல்வி அடைந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது. இந்த நிலையில் பிரிட்டனில் செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும், பொதுவெளியில் 6 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் கரோனா பரவல் அக்டோபர் மாதத்தில் தீவிரமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

கரோனா வைரஸால் உலகம் முழுவதும் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 2 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்