அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பு மருந்து: ட்ரம்ப் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

2021 ஆம் ஆண்டு அமெரிக்கர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப் கூறும்போது, “தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டவுடன், அரசு நிர்வாகம் அதை உடனடியாக அமெரிக்க மக்களுக்கு வழங்கும். ஒவ்வொரு மாதமும் லட்சகணக்கான மருந்துகள் கிடைக்கும். ஏப்ரல் மாதத்திற்குள் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் போதுமான தடுப்பூசிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

தடுப்பு மருந்து தயாரிப்பில் பலர் ஈடுபட்டுள்ளனர். தடுப்பூசிக்குப் பிறகு நாம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம். ” என்று தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் சுமார் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சம் பேர் வரை பலியாகி உள்ளனர்.

கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 என்ற பெயரிலான தடுப்பு மருந்து விரைவில் சந்தைக்கு வரவுள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 mins ago

க்ரைம்

23 mins ago

சுற்றுச்சூழல்

59 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்