ஞானத்தின் கோயில் இந்தியா: பேஸ்புக் நிறுவனர் புகழாரம்

By செய்திப்பிரிவு

சிலிக்கான்வேலியில் உள்ள பேஸ்புக் தலைமை அலுவலகத் துக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் உடன் அவர் கலந்துரையாடினார்.

அப்போது மார்க் ஜூகர்பெர்க் கூறியதாவது: எனது குரு ஆப்பிள் நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ். இந்தியாவில் உள்ள ஒரு கோயி லுக்கு செல்ல அவர் என்னை அறிவுறுத்தினார். அவரது அறிவுரையை ஏற்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு சென்றேன். அங்கு ஒரு மாதம் தங்கியிருந்தேன். இந்தியாவை நான் ஞானத்தின் கோயிலாக கருதுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மோடி பதிலளித்துப் பேசியபோது, இந்திய கோயிலில் மார்க் ஜூகர்பெர்க்கிற்கு நம்பிக்கை, உத்வேகம் கிடைத்ததாக கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

ஆப்பிள் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஸ்டீப் ஜாப்ஸ், ஸ்டான் போர்டு பல்கலைக்கழகத் தில் கல்வி பயின்றார். அப்போது அவர் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் 7 கி.மீட்டர் தொலைவில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு நடந்து செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

32 mins ago

விளையாட்டு

55 mins ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்