பாலஸ்தீனத்தின் மீதான ஒரு தலைப்பட்சமான தீர்வு எதுவும் சரியாக இருக்காது: இம்ரான் கான்

By செய்திப்பிரிவு

பாலஸ்தீனத்தின் மீது செலுத்தப்படும் ஒரு தலைப்பட்சமான தீர்வு எதுவும் சரியாக இருக்காது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமீரகத்துடன் இஸ்ரேல் செய்துகொண்ட சமீபத்திய ஒப்பந்தம் குறித்து பத்திரிகையாளர்கள் இம்ரான் கானிடம் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து இம்ரான் கான் கூறும்போது, “பாலஸ்தீனத்தின் மீது செலுத்தப்படும் ஒரு தலைப்பட்சமான தீர்வு எதுவும் சரியாக இருக்காது. பாலஸ்தீனர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்குவரை இந்தப் பிரச்சனை கீழே இறங்காது. சமீபத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தம் இஸ்ரேல் நலனுக்காக எடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகத்துடனான ஒப்பந்தத்தை ஈரான் அரசு கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மத்திய கிழக்குப் பகுதியில் ஆபத்தை விளைவிக்கும் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே முழு வெளியுறவுத் தொடர்புகளை நிறுவுவதற்கான உடன்படிக்கை சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டது. இதில் மத்தியஸ்தராக இருந்தது அமெரிக்கா. இது இஸ்ரேலுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்.

ஏனெனில், பாலஸ்தீனத்துக்கு நாடு என்ற அந்தஸ்து வழங்கும் வரை இஸ்ரேலை அங்கீகரிக்கவோ, அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளவோ கூடாது என்ற முடிவில் மேற்கு ஆசிய நாடுகள் நீண்டகாலமாக இருந்தன. எனினும், 1979 எகிப்துடனும் 1994-ல் ஜோர்டானுடனும் இஸ்ரேல் தனது முழுமையான வெளியுறவுத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது. தற்போதைய உடன்படிக்கை இஸ்ரேலின் வெளியுறவுக்குக் கிடைத்த மூன்றாவது வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

கருத்துப் பேழை

25 mins ago

தமிழகம்

23 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

55 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்