அர்ஜெண்டினாவில் கரோனா பாதிப்பு 4 லட்சத்தை நெருங்குகிறது

By செய்திப்பிரிவு

அர்ஜெண்டினாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,717 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அர்ஜெண்டினாவில் கரோனா பாதிப்பு 4 லட்சத்தைத் நெருங்குகிறது.

இதுகுறித்து அர்ஜெண்டினாவின் தேசிய சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 11, 717 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அர்ஜெண்டினாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,92,009 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் ஒருப்பக்கம் கரோனா தொற்று அதிகரிக்க கரோனா இறப்பு எண்ணிக்கை 8,000-ஐ கடந்துள்ளது. 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜெண்டினாவில் சமீபத்தில் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டதால்தான் கரோனா மீண்டும் அதிகரித்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தென் அமெரிக்கா நாடுகளில் பிரேசில் மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 2 .2 கோடிக்கும் அதிகமான நபர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ், 8 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளை முடக்கியுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

33 mins ago

கருத்துப் பேழை

54 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்