ஈரானில் கரோனா பலி 20,000-ஐ நெருங்கிறது

By செய்திப்பிரிவு

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,385 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரானில் கரோனா பலி 20,000-ஐ நெருங்குகிறது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை தரப்பில், “ ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,385 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 168 பேர் பலியாகினர். ஈரானில் கரோனாவால் இதுவரை 3,47,835 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,972 பேர் பலியாகி உள்ளனர்.3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் கரோனாவால் அதிக அளவில் ஈரானும், சவுதியும் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஈரான், மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மக்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

17 mins ago

க்ரைம்

21 mins ago

சுற்றுச்சூழல்

57 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

59 mins ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்