அயல்நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்தால் 7 ஆண்டுக்குப் பிறகுதான் குடியுரிமை: நேபாள் புதிய உத்தரவு

By செய்திப்பிரிவு

நேபாள் நாட்டு ஆடவரை அயல்நாட்டுப் பெண் திருமணம் செய்து கொண்டால் அந்த அயல்நாட்டுப் பெண்ணுக்கு 7 ஆண்டுகளுக்குப் பிறகே குடியுரிமை வழங்கப்படும் சட்டத்திருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை ஒப்புதலுடன் நேபாள் நாடாளுமன்றம் இந்த மசோதாவைத் தாக்கல் செய்ய, நேபாள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

நேபாளத்தின் தெற்கே தெரய் பிராந்தியத்தில் மாதேசி இன ஆண்கள் பிஹார் எல்லையில் இருக்கும் பெண்களை மணப்பது வாடிக்கையான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இதைத்தடுக்கவே இந்த மசோதா என்ற சர்ச்சை அங்கு எழுந்துள்ளது.

இந்த மசோதாவின் படி திருமணமான 7 ஆண்டுகளுக்கு நேபாளில் இருக்க உரிமையையும் அதன் பிறகு குடியுரிமையையும் அளிப்பதாகும். இந்த 7 ஆண்டுகளில் அனைத்து உரிமைகளும் திருமணமாகிச் சென்ற பெண்களுக்கு உண்டு. மேலும் இந்தப்பெண்கள் இந்தக் காலக்கட்டத்தில் நேபாளத்தில் அசையா சொத்து பரிவரத்தனை செய்யவோ, விற்பனை செய்யவோ அதன் மூலம் லாபம் ஈட்டவோ தடையில்லை, கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பும் படித்துக் கொள்ளலாம். 7 ஆண்டுகளுக்குப் பிறகு மணப்பெண்ணுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் என்று இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

53 mins ago

ஜோதிடம்

58 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்