வெளிநாட்டு பயணிகளை ஈர்க்க சுற்றுலாவுக்கு தயாராகும் தாய்லாந்து 

By செய்திப்பிரிவு

உலக நாடுகள் அதன் வெளிநாட்டு விமான சேவைகளை படிப்படியாக தொடங்கி வருகிற நிலையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் நம்பகத்தனமான சுற்றுலத் தலமாக தாய்லாந்தை உருவாக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளது.

கரோனா பரவல் காரணமாக மார்ச் மாதத்தில் பெரும்பாலான நாடுகள் அதன் எல்லைகளை மூடின. தற்போது கரோனா தொற்று நீடித்தாலும் பொருளாதார நோக்கை கருத்தில்கொண்டு எல்லைகளைத் திறந்து வருகின்றன. இந்நிலையில் சுற்றுலாத் துறையின் வருமானம் ஈட்டும் தாய்லாந்து, கரோனாவுக்குபிறகு வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் புதிய மாற்றங்களை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளிடையே நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு தங்கும் விடுதிகளுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதிகள் 50 சதவீத அளவில் மட்டும் பயணிகளை அனுமதிக்கும் என்றும் அதன் மூலம் சமூக இடைவெளி உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தாய்லாந்தின் சுற்றுலாத் துறை ஆணையத்தின் சந்தைப்படுத்துதல் மற்றும் தகவல்தொடர்புகளுக்கான துணை ஆளுநர் டேன்ஸ் பெட்சுவன் கூறுகையில், ”நாங்கள் எங்கள் சுற்றுலாத் துறையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். சுற்றுலாவுக்கு மிக நம்பகத் தகுந்த தேர்வாக தாய்லாந்தை உருவாக்க போகிறோம். தங்கும் விடுதிகளுக்கு மருத்துவச் சான்றிதழ் வழங்கப்படும். அதன் மூலம் அங்கு சுகாதார கட்டமைப்பு உறுதி செய்யப்படும். இது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தக்கூடியதாக அமையும்” என்று அவர் தெரிவித்தார்.

தாய்லாந்து ஆரம்பநிலையிலே கரோனா பரவலைக் கட்டுப்படுத்தியது. இதுவரை 3,100 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டு இருக்கிறது. 58 பேர் பலியாகி உள்ளனர்.

தாய்லாந்தின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் மொத்த வருமானத்தில் 12 சதவீதம் சுற்றுலாத் துறை மூலம் கிடைக்கிறது. கரோனா பரவலால் தாய்லாந்தின் சுற்றுலாத் துறை முடக்கத்தை சந்தித்தது. சென்ற ஆண்டு கிட்டத்தட 4 கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தாய்லந்துக்கு வருகை தந்துள்ளனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 1.4 கோடியாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூன் 30 வரை வெளிநாட்டு விமானங்களுக்கு தாய்லாந்து தடைவிதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்