கரோனாவுக்குப் புதிய சிகிச்சை: சவுதியுடன் கைகோத்த ரஷ்யா

By செய்திப்பிரிவு

கரோனாவுக்குப் புதிய சிகிச்சை முறையை ரஷ்யா உருவாக்கியுள்ளது என்றும் விரைவில் சவுதி அரேபியாவுடன் இணைந்து சோதனையில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ரஷ்யா தரப்பில், “நாம் சவுதி அரேபியாவுடன் இணைந்து புதிய சிகிச்சை முறையைக் கண்டறிய உள்ளோம். கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ( Avifavir ) இந்தச் சிகிச்சை முறையைப் பயன்படுத்தும்போது அது நல்ல பலனை அளித்துள்ளது. இது தொடர்பாக சவுதி அரேபியாவுடன் பேசி வருகிறோம். சவுதி அரேபியா இந்தப் புதிய சிகிச்சை முறையை இணைத்து சோதனை நடத்த ஆர்வமாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் 4,05,843 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,693 பேர் பலியாகியுள்ளனர். சவுதி அரேபியாவில் 85,261 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 503 பேர் பலியாகியுள்ளனர்

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன், பிரேசில், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.

இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

21 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்